பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

பழமொழி நானூறு மூலமும் உரையும்



வன்கண்ண னாகிஒறுக்க, ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு.

தமக்கு வேண்டியவர்கள் குற்றம் செய்தாலும், அவரை வேண்டியவர் எனக்கருதி விட்டுவிடாமல், முறையாகத் தண்டிப்பதே ஒரு சிறந்த அரசியல் தலைவனுக்கு அழகாகும். அல்லாமல், அவனிடம் தாட்சணியம் காட்டினால், அவன் நெடுங்காலம் ஆளமாட்டான் என்க. 'ஒறுக்கல்லா மென் கண்ணன் ஆளான் அரசு’ என்பது பழமொழி. 112 113. எங்கும் பிச்சை கிடைக்கும் - 'மாரி என்ற ஒன்று இல்லாமற் போய், உலகமே வறண்டு போயிருந்த காலத்தினும்கூடப், பாரி வள்ளலின் மடப்பத்தை உடைய மகளானவள், பாணனுக்கு, நீர் உலையுள் பெய்து அழகாகச் சமைத்துவைத்திருந்தசோற்றுப்பானையைத்திறந்து, பொன்மணங் கொண்டு சோற்றைக் கொடுத்து உதவினாள். ஆதலால், சென்று இரந்தால் ஒன்றுங் கிடையாது போகிற வீட்டு முற்றம் என்பது உலகில் எதுவுமே இல்லையாகும்.

மாரியோன் றின்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு--நீருலையுள் பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள் ஒன்றுரு முன்றிலோ இல். வீட்டினர், தம் வாயில் தேடி வந்தவர்க்கு எதையேனும் தவறாது உதவுவர்; உதவ வேண்டும் என்பது கருத்து. 'பொன் கொண்டு திறந்து புகாவாக நல்கினாள்-பொன்னைப் பெய்து கொண்டு வந்து சோறிடுவது போலச் சொரிந்து உதவினாள் எனலுமாம்.'ஒன்றுரு முன்றிலோ இல் என்பது பழமொழி.13 114. சொல்லும் பொருளும் உணர்தல் -

வளைவான உப்பங்கழிகள் நிறைந்துள்ள குளிர்ச்சிபொருந் திய கடற்கரை நாட்டுக்கு உரியவனே உள்ளத்திலே கள்ளமில் லாமல் நட்புச் செய்தவர்களுக்கு நண்பர்கள் சொன்ன சொல் லும், அவற்றின் பொருள் முடிவும் ஒன்றாகவே தோன்றும். சொன்ன சொற்களை வேறுபட்ட பொருளாக எடுத்துக் கொண்டுபழி கூறுதல்,ஒருவனுடைய பாவினை ஏற்றி மற்றொரு வனுடைய பாவாகக் கட்டுதலோடுபொருத்தம் உடையதாகும்.

புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த உரையும் பொருள் முடிவும் ஒன்றால்-உரையிறிது