பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாவினைப் பாடியுள்ளார். நானூறு பழமொழிகளை அமைத்து நானூறு வெண்பாக்களால் ஆக்கப்பெற்றதனால், "பழமொழி நானூறு" என்று இந்த நூல் பெயர்பெற்றுள்ளது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று இந்தப்பழமொழி நானூறு. 1874 இல் சோடாசவதானம் சுப்பராயச் செட்டியார் முதன்முதலாக அச்சிட்டுள்ளார். 1947இல் திருமணம் செல்வக் கேசவராய முதலியார் பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட அதிகாரப் பகுப்பு முறையில் சிறந்த உரையுடன் வெளியிட்டார். 1918 இல் தி.சு. ஆறுமுக நயினார் வெளியிட்டார். -

பழமொழிகளுக்கே முதன்மை தருதல் வேண்டும் என்னும் எண்ணத்தால் புலியூர்க்கேசிகனார் பழமொழிகளின் அகரவரிசைப் படி வெண்பாக்களைத் தொகுத்து வரிசைப்படுத்தித் தெளிவுரையுடன் பதிப்பித்தார். அந்த வரிசை முறையிலேயே இந்நூல் வெளியிடப்பெறுகின்றது. இந்த நூலின் முதற்பகுதியிலே மூன்று வெண்பாக்கள் சேர்க்கப்பெற்றுள்ளன. அவை "புறத்திரட்டு" என்னும் பழமொழி நானூறு அமைப்பிலே இருப்பதனால் புலியூர்க்கேசிகன் அந்த நூலில் கண்டுள்ள எண் முறைப்படியே இங்குத் தொகுத்தளித்துள்ளார். புலியூர்க்கேசிகனாரின் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்பட்ட நாள்களிலிருந்து எங்களது பதிப்பகத்தின் வாயிலாக அவர்தம் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றோம்; அதன்படியே சிறந்த முறையில் இந்த நூலும் வெளிவருகின்றது. பெற்றுப் பயன்பெறுவது உங்களது தலையாய கடமையாகும்.

பதிப்பகத்தார்