பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

61



கடலொடு, துரும்பு ஒட்டாதது போல, சான்றோர்பால் இரந்து நிற்றலாகிய குணமும் ஒருபோதும் சேராது என்பது கருத்து, கடலொடு காட்டு ஒட்டல் இல் என்பது பழமொழி. காட்டு-துரும்பு மடலின் அசைவுடன் புள்ளும் சேர்ந்து ஆரவாரிக்கும் என்பதாம். v 122 123. துறவிகள் புலால் விரும்புதல்

விடுவதற்கு அரியவான வலிமையுடைய ஆசைகளையெல் லாம் மிகவும் மனவுறுதியுடனே தம்மிடத்தே நின்றும் நீக்கி விட்டவர்கள், ஒழுகுவதற்கு அரியதான நல்லொழுக்கநெறியினி டத்தையே நிலைபெற்ற சான்றோர்கள். அவர்கள், தமக்குத் துன்பம் வந்த காரணத்தினாலே, கிடைத்த புலாலினை உண்ணு தல், கடலினின்றும் நீந்திக்கரை சேர்ந்த ஒருவன், கன்றின் குளம் படி அளவான நீரிலே வீழ்ந்து அமிழ்ந்து விட்டது போன்றதாகும்.

விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் படர்வரிய நன்னெறிக்கண் நின்றார்--

இடருடைத்தாய்ப் பெற்ற விடக்கு நுகர்தல், கடல்நீந்திக் கற்றடியுள் ஆழ்ந்து விடல். புலால் உண்ணுதல், பிற எல்லாத் தீய ஆசைகளினும் கொடியதாகும்; அதனை விட்டவரே சான்றோர் என்பது கருத்து. கடல்நீந்திக் கற்றடியுள் ஆழ்ந்து விடல்’ என்பது பழமொழி.கற்றடிகன்றின் அடி அந்த ஆழமுடைய நீர் என்பது பொருள்.பழங்கால முனிவர்களிற் பலர் புலாலுண்டுவந்தததைக் கண்டிக்கும் வகையில் கூறியது.இது 123 124. மன்னர் கருத்துக்கு இசைய நடக்க -

மடல்கள் நிரம்பியிருக்கிற பனைமரங்கள், மிகுதியாக விளங் கும் கடற்கரைக்கு உரியவனே! மன்னரைச் சேர்ந்து வாழ்ந்து வருகிறவர்கள், அம் மன்னர், தம்மை விலக்கி விடுதற்குரிய செயல்களைச் செய்து, அதனால் அவர்கள் தம்மை என்ன செய்வார்களோ என்று பயந்துகொண்டே வாழாமல், அரியதான உடலினைப் பெற்ற அம்மன்னர்கள் மகிழ்வடையத் தக்க வாறே நடந்துவர வேண்டும். அப்படி அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றால், கடலினும் கிடையாத அளவு பெருஞ்செல்வ வளம் எல்லாம் அவர்களுக்கு வந்து வாய்க்கும். விடலமை செய்து வெருண்டகன்று நில்லாது உடலரும் மின்னர் உவப்ப வொழுகின்,