பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O முனுைரை

பழமொழி என்றால் என்ன? - - பழம்தின்னச்சுவைப்பது உண்பாரின் உடல்வளத்துக்கும் உதவுவது. இவ்வாறே கேள்விக்கு இனிதாகவும் அறிவுக்கு வளம் சேர்ப்பதாகவும் விளங்கும் அரிய வாக்குகளையே, 'பழமொழிகள் என்கின்றோம்.

நம்முன்னோர்களின் வாழ்விலே பூத்துக்காய்த்துக்கனிந்த அனுபவ வாக்குகளே பழமொழிகள். அந்த வாக்குகளை உளங்கொண்டு, நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் போது, அப்படிக் கொள்பவரின் வாழ்வு வளமாகின்றது. பழமொழிகளைக் கற்கும்போது, நினைவிற் கொள்ளவேண்டிய ஒர் உண்மை இதுவாகும். -

இனிப்பழையவர்களான நம்முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தோன்றி, காலங்காலமாகத் தொடர்ந்து வழக்கிலிருந்துவரும், பழைய வாக்குகள்’ என்றும் பழமொழிகளைக் கூறலாம். இப்படிக் கூறும்போது, தமிழினத்தின் பண்பாட்டிலே விளைந்த அறிவுச் சுடர்கள் இவை என்ற அறிய வேண்டும். -

தமிழினத்தின் செம்மையான நல்வாழ்வுக்கு உதவும் அறிவொளி விளக்கங்களாகப் பழமொழிகள் அமைந்து விளங்குகின்றன. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் ஞானத்தெளிவுரைகளாகவும் அவை சுடரிடுகின்றன. - பழமொழிக்கு 'முதுமொழி என்றும் ஒரு பெயர். முதுமொழியின் இலக்கணத்தைத் தொல்காப்பியனார், அக்காலத்திலேயே வரையறுத்துக் கூறியுள்ளார்.

'நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிச் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப" என்பது தொல்காப்பியர் கூறுவதாகும். - இந்த வகையில் அமைந்த பழமொழிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு, பழங்காலப் புலவர்கள் பல புலமை வழிகளைக் கையாண்டுள்ளனர். பழமொழிகள் பெரும்பாலும்