பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

69



களைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள். அதுபோலவே, உண வாக நிரம்பி உதவும் ஒரு தகுதி இல்லை என்றாலும், கள்ளினைக் கண்டவுடனேயே குடிகாரனின் உள்ளமும் களிப்படையும்.

மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார் பேணா துரைக்கும் உரைகேட்டு உவந்ததுபோல் ஊணார்ந்து உதவுவதொன்று இல்லெனினும்

. . கள்ளினைக் காணாக் களிக்கும் களி. குடிகாரன், கள் தனக்கு உணவாகாது என்பது அறிந்தும், கள்ளைக் கண்டதும் தன் அறியாமை காரணமாக அதை உண்டு மகிழ்வான். கள்ளினைக் காணாக் களிக்கும் களி என்பது பழமொழி. " . 139 140. கள்ளும் சோம்பேறித்தனமும்

மாட்சிய மைப்பட்ட அணிகலன்களை அணிந்தவளே! கள்ளைக் குடித்துவிட்டுக் குடித்துவிட்டோமென்று வருந்து பவர்கள் யாருமே இல்லை. கொடிகட்டிய வலிமையான தேர் களையுடைய மன்னர்களால் பகுதிப்பணம் கொள்ளப்பட்டு உயிர் வாழ்கின்ற சிற்றரசர்கள், அந்த மன்னர்கள் ஒரு காரியத் தை மனத்திற் கொண்டு ஏவிய செயலைத் தம் சோர்வு காரண மாகச் செய்யாது விடுதல் என்ன பயனைத் தரும்? அவர்க்கு அழிவையே தரும் .

கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார் எடுத்துமேற் கொண்டவரேய வினையை மடித்தொழிதல் என்னுண்டாம்? மாணிழாய்!

- கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல். . குடிகாரன் குடித்ததற்கு வருந்தாமலிருக்கலாம்; அதன் விளைவுகளுக்குத் தப்ப முடியாது. அடிமையரசர்களும் தம் சோம்பேறித்தனத்திற்கு வருந்தாமலிருக்கலாம். ஆனால், அதனால் வரும் விளைவுகளுக்குத் தப்ப முடியாது. கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல் என்பது பழமொழி. 140 141. ஆபத்தில் உதவாத நண்பர்கள் • * பாம்புக்கொடியை உடையவன் துரியோதனன்.அவனுக்கு நண்பன் வெண்மேனியினனான பலராமன்.பாரதப்போரினுள், அவன், தன் நண்பனுக்கு உதவியாக எதிரிகளைத் தாக்கிப்