பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

73



களுக்கு உரியவனே! ஒருவர், தாம் வருந்திமுயன்று தேடிய சிறந்த பொருளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கீழ் மக்களிடத்தே ஒப்புவித்தல், காக்கையைக் காவலாக வைத்த சோற்றைப்போல, விரைவிலே இல்லாமல் அழிந்து போய் விடும்.

ஊக்கிய உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை நோக்குமின் என்றிகழ்ந்து நொவ்வியார் கைவிடுதல் போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப! காக்கையைக் காப்பிட்ட சோறு.

காக்கை தன் இனத்தையும் அழைத்து அந்தச் சோற்றை யெல்லாம் உண்டுவிடுவது போல, அத் தீயவர்களும் தம் இனத்துடன் கூடி அதனைப் போக்கடித்து விடுவார்கள். காக்கையைக் காப்பிட்ட சோறு என்பது பழமொழி. 147

148. தமக்குத் தர்மே தண்டித்தல்

சான்றோர்கள், பிறர் காணமாட்டார்கள் என்று இருந் தாலுங்கூட, மாட்சியற்ற ஒரு செயலைச் செய்யவேமாட்டார் கள்."எனக்குத் தகுதி அல்லவா? என்ற ஒன்றையே கருதினான்; தனக்குத்தானே சான்றாகவும் ஆயினான்; தன்பிழையை நினைத் துத் தன் கையையே குறைத்துக் கொண்டான் பாண்டியனான பொற்கைப் பாண்டியனும் இதுவே, சான்றோர் இயல்பு ஆகும்.

எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் தானாய்த்-தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும், காணார் எனச்செய்யார் மாணா வினை. - -

கீரந்தை மனைவிக்காகக் கதவைத் தட்டிய பாண்டியன் தான் செய்தது நன்மை கருதியானாலும், தகுதியன்று என்று தன்கையை குறைத்துப் பின் பாற்கையன் ஆயினான். இதுவே சான்றோர் பண்பு. ‘காணார் எனச்செய்யார் மாணா வினை என்பது பழமொழி - - 148 149. சூதினால் சாவும் வரும் - - -

பாரதக் கதையினுள்ளும், தம் தாயப் பொருளினையே பந்தயப் பொருளாகக் கொண்டு, நூற்றுவரும் பாண்டவரோடு சூதுப்போர் செய்தனர். அது காரணமாக, அவர்க்குப் பகை வராகிப் போர்க்களத்தின் இடையே உயிரும் இழந்தனர். அதனால், படித்தவர் எவரும் விருப்பமுடன் சூதாடவே மாட்டார்கள். -