பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

பழமொழி நானூறு மூலமும் உரையும்



பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரோடு ஏதிலராகி இடைவிண்டர் ஆதலால் காதலோ டாடார் கவறு.

பாரதக்கதை நாடறிந்த வொன்று, அதனைக் காட்டிச் சூதின் விளைவை விளக்குவது செய்யுள். ‘காதலோ டாடார் கவறு’ என்பது பழமொழி. 149 150. காப்பாரும் பார்ப்பாரும்

வெயிலின்கண் காயவைத்த வற்றலைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இமைகொட்டும் அளவு நேரத்தினுள்ளும், தம் பார்வையிலே பட்டதென்றால் அதனைப் பறவைகள் திருடிச் சென்றுவிடும். அதுபோலப் போற்றிப் புறந்தந்து சேர்த்துவைத்த சிறந்த பொருள்களுக்கும், அதனைக் காப்பவரைவிடத்திருடப்பார்ப்பவர்களே அதிகமாகும்

நோக்கியிருந்தார் இமைக்கும் அளவின்கண் நோக்கப்படினும் உணங்கலைப் புட்கவரும் போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண்பொருட்கும் காப்பாரிற் பார்ப்பா மிகும். பொருளை, அதனால் பூட்டிவைக்காது நல்ல காரியங் களிலே செலவிட்டுவாழவேண்டும் என்பது கருத்து.'காப்பாரிற் பார்ப்பார் மிகும்’ என்பது பழமொழி. பார்ப்பார் - தாம் கைக்கொள்ளப்பார்ப்பவர். 150 151. நல்லபடி நடவாத நண்பர்

மான்போன்ற மருட்சியான கண்களை உடையவளே! உள்ளத்தாலே ஒருவரைச் சிநேகித்து, நண்பர் என்று நாம் நடந்துவருங்காலத்து, அவர் தம்முடைய உள்ளத்திலே நாணம் என்பது கொஞ்சமேனும் இல்லாமல், நல்ல முறையிலே நம்மிடத்து நடவாமலிருந்தார் என்றால், அதனால் என்ன? காட்டினிடத்தே எரித்த ஒளிவீசிய நிலவைப்போன்று பயனற்ற அந்த நட்புக்காகச் சான்றோர் மறந்தும் வருத்தப்படவே மாட்டார்கள். அதனை உடனேயே கைவிட்டுவிடுவார்கள்.

தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால் நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்? மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரால் கானகத்து உக்க நிலா.