பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

75



தான் அன்பு காட்டியும் அதனை உணரவில்லை என்றால், அது காட்டிடத்தே பெய்த நிலவுபோலப் பயன் அற்றதாகும் என்பது கருத்து,"கானகத்து உக்கநிலா என்பது பழமொழி. 151 152. பொருளால் தருமம் செய்க - - X

அடுத்துத் தொடர்நது வருகின்ற பிறவிகளுக்கு உதவும் நல்வினைப் பயனாக விளங்கும்படி, ஒரு தர்மத்தையும் செய்யாத செல்வர்கள் சிலர். அவர்கள், தம் பொருளையே தொடர்ந்து ; செல் லும் பற்றின் காரணமாக, அதனைத் தொகுத்து வைத்துவிட்டு அதன் பயனை அநுபவியாமல் சாவார்கள். போர்க்களத்திலே பகைவரோடு போர் புரியும் பொழுது, பகைவரின் ஆயுதத்தால் தாக்குண்டு தம் குடர் சரிய, அதனை உள்ளே மீண்டும் எடுத்து இட்டுமேலே கட்டுக்கட்டிவைத்துத், தாம் பிழைத்து விட்டதாக மகிழ்பவர் போன்றவர் அவர்கள். படரும் பிறப்பிற்கொன் lயார் பொருளைத் தொடருந்தம் பற்றினால் வைத்திறப்பாரே, அடரும் பொழுதின்கண் இட்டுக், குடரொழிய மீவேலி போக்கு பவர். குடர் சரிந்தபின் அவன் வாழ்வும் விரைவிலே முடிந்து போகும். அதனை அறியாமல் அவன் மகிழ்வது போன்றதே பொருளை வழங்காது வைத்துச் சாகின்றவனின் அற்பமான மகிழ்வும், மீவேலி - மேற்கட்டு குடரொலிய மீவேலி போக்குபவர்’ என்பது பழமொழி. - 152 153. வேரொடு அறுத்துவிட வேண்டும் - . மார்பிலே முத்துவடங்கள் விளங்கும் மன்னனே! எல்லையற்றநற்குணங்களுடைய பெரியவனாகவிளங்கியவன், பாண்டவருள் மூத்தோனாகிய தருமபுத்திரன். அவனும், தன். பகையை ஒழித்துக் குடியை நிலைபெறுத்தும் பொருட்டுப் பொய் கூறினான்.மிகுதியான நரகத்தை அடைவது தெரிந்தும், தன் குடிக்காகப் பொய்கூறி அந்த நரகத்திற்கும் சென்றான். ஆதலால், தம்முடைய குடி கெடுமாறு பகைவர் எதிர்த்து வந்தால் அவருக்கு இரங்கமாட்டார் அறிவுடையோர் தம் குடியின் வாழ்வு நோக்கி அப்பகையை என்ன செய்தும் அடியோடு அழித்துவிடவே முயல்வர். . . . நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரயம் வரம்பில் பெரியானும் புக்கான் -- இரங்கார் கொடியார மார்ப குடிகெட வந்தால் அடிகெட மன்றி விடல்.