பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

79



இப்பிறப்பிலே, பொருத்துதலுக்கு அஞ்சி, எவ்வளவு சிறிய தீவி னையும் தமக்குத்துன்பம் விளைவித்துக்கழிந்துபோகும்போது அதனைப் பொறுக்க முடியாமற் போவதைக் காண்கின்றோம். அதுதான், ஒரு குழியினிடத்திலே தோண்டிய புழுதியானது மீண்டும் அதனுட் கொள்ளாது அதிகமாகவே இருப்பதைப் போன்றதாகும். -

எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும் கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே குழிப்பூமி ஆற்றா குழிக்கு. செய்த தீவினையைவிட, அதன் பயனாக அநுபவிக்கும் தீவினைப்பயன்மிகஅதிகமாயிருக்கும் என்பது கருத்து.தீவினை செய்தற்கு அஞ்சவேண்டும் என்பது முடிவு. ‘குழிப்பூமி ஆற்றா குழிக்கு’ என்பது பழமொழி. 160 161. அவையை ஊடறுக்க எண்ணக் கூடாது

காற்றினாலே மோதி எறியப்படும் அலைகள் கரைமேற் சென்று உலவிக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு உரிய தலைவனே! சூரியனையே ஊடறுத்துச் சென்றாலும் செல்ல லாம். அறிஞர்கள் கூடியிருக்கிற அவையினை ஊடறுத்துப் போகவே கூடாது.அப்படிப்போவதுஅறிவுடைமையும் அன்று: பிறந்த குடிக்கு அழகிய செயலும் அன்று:அறிவதாகிய அறநெறி யின்பாற் பட்டதும் அன்று. கீழ்மக்கள் என்று சொல்லப்படு கின்ற பழிச்சொல்லையே அது கொண்டு தரும்.

அறிவன்று அழகன்று அறிவதுஉம் அன்று சிறியர் எனப்பாடும் செய்யும் -- எறிதிரை சென்றுலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த என்றுடு அறுப்பினும் மன்று. சான்றோர் அவையிலே அவர்களை மறுத்துப்பேசுவது கூடாது அது அவமானமே தரும் என்பது கருத்து, ‘குழுவத் தார் மேயிருந்த என்றுடு அறுப்பினும் மன்று என்பது பழமொழி.16 162. பணக்காரரிடம் பலர் வருவார்கள்

எருமையின்மேலே நாரையானது இருந்து உறங்கிவழிந்து கொண்டிருக்கும் நீர்வளமுடைய ஊரனே! குளத்தினைத் தோண்டியவர் எவரும், அதன்பால் இருப்பதற்காகத் தவளை களை அழைத்துவரத் தேடிச் செல்வது இல்லை. அவை தாமே