பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பழமொழி நானூறு மூலமும் உரையும்



எதனையும் முடிக்கும் வகையினை ஆராய்ந்து வெற்றி யுடன் முடிக்கவேண்டும் என்பது கருத்து.செம்பியன்-சோழன்; தூங்கெயில் எறிந்த தெர்டித்தோட் செம்பியன். கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண் என்பது பழமொழி. 170 171. வலியவர் துணையால் வலிமை வரும்

அழகுடனே தோன்றுகிற தேமற் புள்ளிகளையும், ஒளி வீசும் ஆபரணங்களையும் உடையவளே! எருதானது வலியதாயிருந்த தானால் அதனுடைய கொம்பும் கூர்மையானதாகவே இருக்கும். அதனால், போர்த்தன்மை பொருந்திய ஆற்றலுடைய மன்ன ரைத் துணையாகச் சேர்ந்தவர்கள், மற்றவர்களுக்குப்பயந்து, தாம் மனம் தளர்தலும் உண்டோ? தளர வேண்டியதில்லை.

செருக்கெழு மன்னர் திறனுடையார் சேர்ந்தார் ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ? உருத்த சுணங்கின் ஒளியிழாய்! கூரிது எருத்து வலியதன் கொம்பு. - -

எருது வலியதானால், அதனைச் சேர்ந்த கொம்பும் கூர்மையுடையதாகப் பகையை அழிக்கும் ஆற்றலைப்பெறுவது போலத்தாம் வலியற்றவரும் வலியுடைய மன்னரைச் சேர்ந்தால் வலிமையாளர் ஆவர் என்பது கருத்து. ‘கூரிது எருத்து வலியதன் கொம்பு’ என்பது பழமொழி. 171. 172. கொடையும் கூலிவேலையும் - வெற்றித் தன்மையுடைய குதிரையைப் போல அலைகள் ஆரவாரத்துடன் பாய்ந்துவருகின்ற, கடலின் குளிர்ச்சியான கரை கன்ளயுடைய தலைவனே! வந்து சேர்கின்ற பயனைப் பற்றியும் கருதாது மிகுதியாகப் பகுத்தறிவு என்பது ஒன்றும் இல்லாமல், புகழ் ஒன்றையே கருத்தாகக் கொண்டு ஈகின்றவர்களின் கொடையானது பயனற்றதாகும்.அது, கூலிக்கு வேலை செய்து உண்ணுவதுபோல்வதாகும்.

பயன்நோக்காது ஆற்றவும் பாத்தறிவொன் றின்றி இசைநோக்கி ஈகின்றார் ஈகை--வயமாப்போல் ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப! கூலிக்குச் செய்துண்ணு மாறு. கூலிக்கு வேலை செய்பவன், கூலியைக் கருத்தாகக் கொண்டவனே அல்லாமல், செய்யும் வேலையின் தராதரங்

, to