பக்கம்:பழைய கணக்கு.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

எவ்வளவோ சொல்லியும் அவர் பத்து ரூபாய் மட்டும் எடுத்துக் கொடுத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் எங்கள் சுற்றுப் பயணம் முடிந்ததும் மைசூர் வழியாகச் சென்னை திரும்ப வேண்டும் என்று திட்டமிட்டோம். அதுவரை மணியன் மைசூர் பார்த்ததில்லை. எப்படியும் மைசூர் பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவலாக இருந்தார். ஊட்டி கலெக்டரிடம், “மைசூர் வரை ஜீப் அனுப்ப முடியுமா?” என்று கேட்டோம். எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து தந்த கலெக்டர் கொஞ்சம் யோசித்து விட்டு, “என் அதிகாரத்துக்கு உட்படாத கர்நாடக எல்லைக்குள் நான் ஜீப் அனுப்பக் கூடாது!” என்று தயங்கியபடியே கூறினார்.

ஆனாலும் எங்கள் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், “சரி...உங்களுக்காக அனுப்பி வைக்கிறேன்” என்று அரை குறை மனதோடு அனுப்பி வைத்தார்.

மைசூர் போகும் வழியில் கூடலூரில் சில நிமிடங்கள் ஜீப்பை நிறுத்தி, காப்பி சாப்பிட்டு மீண்டும் மைசூர் நோக்கிப் பயணமானோம். சூரியன் மறைந்து லேசாக இருள் பரவத் தொடங்கிய நேரம். தூரத்தில் சாமுண்டீசுவரி மலையின் அழகிய தோற்றம் தெரிந்தது. விளக்குகள் அப்போதுதான் கண் சிமிட்ட ஆரம்பித்திருந்தன. மைசூரை நெருங்கி விட்ட குஷி காரணமாக மணியனின் குரலில் உற்சாகம் தொனித்தது. ஆனால் அந்த சந்தோஷம் சில நிமிடங்கள் கூட நீடிக்க வில்லை. திடீரென்று மணியன் பதற்றத்தோடு கையை உதறிக் கொண்டு, “ஐயோ சாவி பணப்பையைக் காணுேமே!” என்றார்.

கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லே. கூடலூரில் இறங்கி காப்பி சாப்பிட்டு விட்டு மீண்டும் ஜீப்புக்குள் அமர்ந்த போது கூட மணியன் கையில் பணப்பையைப் பார்த்தது நன்றாக ஞாபகம் இருந்தது.

“இங்கேதான் பையை வைத்தேன்” என்று ஜீப்பின் பக்கவாட்டில் சக்கரத்துக்கு மேலாகக் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த ஒரு கித்தான் துணியை விலக்கிக் காட்டினர்.

மணியன் காட்டிய இடம் உண்மையில் ஜீப்பின் ஜன்னல் கான்வாஸ் துணியால் திரைபோல் மூடிப் பித்தான் போட்டிருந்தார்கள். ஜீப்பின் அந்தப் பகுதி அமைந்துள்ள விதம் பொதுவாக எல்லோருக்குமே அங்கே ஏதோ பை இருப்பது போலத்தான் தோன்றும். கூடலூர் வரை பணப்பையைக் கையிலேயே வைத்திருந்த மணியன் காப்பி சாப்பிட்டு விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/41&oldid=1145983" இலிருந்து மீள்விக்கப்பட்டது