பக்கம்:பவள மல்லிகை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பவள மல்லிகை

5

"வரப்போகிற கிழவரையா சொல்லுகிறாய்?" என்ற சிரித்தபடியே கேட்டேன்.

அவளும் சிரித்தபடியே, "போங்கள் மாமி, அவருடைய அகமுடையாளை நீங்கள் வசியப்படுத்தி விடுவீர்களென்றல்லவா சொல்லுகிறேன்?" என்றாள். இருவரும் சிரித்தோம். -


பெரிய தெரு எங்கே இருக்கிறது, குப்பு முத்து முதலி்த்தெரு எங்கே இருக்கிறது? அங்கே இருந்து அம்புஜம் நாள் தவறாமல் பூவுக்காக வந்துவிடுவாள். பள்ளிக்கூடத்தில் ஐந்தாவதோ ஆறாவதோ வாசிக்கிறாளாம். அவள் தகப்பனார் பள்ளிக்கூடத்து வாத்தியாராம். அம்மா இல்லையாம். அகத்தில், பாட்டி மாத்திரம் இருக்கிறாளாம். இரண்டு தம்பிமார்கள்.

அவளைக் கண்டது முதல் அவளிடத்தில் எனக்கு ஒரு பற்று ஏற்பட்டுவிட்டது. அதோடு அவள் தாயில்லாக் குழந்தை என்பது தெரிந்தது முதல் இரக்கமும் சேர்ந்து கொண்டது. பாவம் தாய் அன்புக்கு எங்கிய உள்ளம் கண்ணன் நினைவில் திருப்தியடைய எண்ணுகிறதோ!

உண்மையைச் சொல்லப் போனால் எனக்குக் கண்ணனிடத்தில் பிரமாத பக்தி ஒன்றும் இல்லை. ஏதோ பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தபடி தெய்வத்துக்குப் பயப்படத் தெரியும். பிள்ளையார், சிவன், பெருமாள் என்று சொல்லத் தெரியும். கோவிலுக்குப் போவேன்; அர்ச்சனை செய்வேன்.

அம்புஜம் மெல்ல மெல்ல என் உள்ளத்திலும் கண்ணன் நினைவைப் புகுத்தினாள். அந்தத் தியானமோ என்னவோ பகவான் கண் பார்த்தார். எங்கள் வீட்டில் ஒரு கண்ணன் உதயமானான். அவளோடு பழகின ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/11&oldid=1406369" இலிருந்து மீள்விக்கப்பட்டது