பக்கம்:பவள மல்லிகை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோடி மரப்பாச்சி

"உங்களுக்கு மரப்பாச்சி விற்கும் கடை ஏதாவது தெரியுமா ?' என்று கேட்டாள் கோமதி.

அப்போதுதான் சங்கான், காரியாலயத்திலிருந்து வந்தவன் சட்டையைக் கழற்றிக்கொண்டிருந்தான்.

'ஏன் ? எதற்காசுக் கேட்கிருய் ? நம் வீட்டில் இருக்கிற மாப்பாசிகள் போதவில்லை என்று கேட்கிருயா? நேற்றுத்தானே பெட்டி நிறையக் கொலுச் சாமான்கள் ஊரிலிருந்து வந்திருக்கின்றன? அதில் ஊர்ப்பட்ட மரப் பாச்சி இருக்குமே; பார்த்தாயோ?”

"இன்றைக்குத்தான் பெட்டியை உடைத் துப் பார்த் தேன். ஒரு மரப்பாச்சிக்கு ஏற்ற ஜோடி வேண்டும். அதற்காகத்தான் கேட்டேன்.' - -

ஜோடி வேண்டுமென்று சொல்கிருயே; அது ஒற்றை மாப்பாச்சியாக இருக்கக்கூடாதோ'

சங்கான் சட்டையைக் கழற்றிவிட்டுத் துண்டை மேலே போட்டுக்கொண்டான். முகத்தை அலம்பிக் கொண்டு வந்து நாற்கலியில் உட்கார்ந்தான். கோமதி சுடச்சுடக் காபியைக் கொண்டுவந்து ஆற்றினபடியே பேசினுள். -

ஜோடி மரப்பாச்சிகள் இருக்கின்றன. ஆளுல் அந்த ஜோடியில் ஒன்று கால்பக்கம் கரிந்திருக்கிறது. முதல் முதலாகக் கொலு வைக்கிருேம். அந்தக் கரிந்த மரப் பாச்சியை வைக்கலாமா? பெரிய மரப்பாச்சிகள் அவை;

ஆணும் பெண்ணுமாக இருக்கின்றன. ஆணுக்குப் பாசிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/114&oldid=592217" இலிருந்து மீள்விக்கப்பட்டது