பக்கம்:பவள மல்லிகை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்குக் கால் உண்டு

சில வருஷங்களுக்கு முன் கலைமகளில் கதையின் கதை' என்று ஒருபகுதி தொடங்கினேம். எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய கதைகளின் கதையைத் தொடர்ந்து எழுதினர்கள். கதை உருவானதற்குக் காரணமாக இருந்த கிகழ்ச்சிகள், எண்ணங்கள், அவை மேலும் மேலும் வளர்ந்த வகை, கதைப்பகுதிகள் உருவெடுத்த முறை, கதையின் கட்டுக்கோப்பு முழுவதும் ஒருவகையாக நிறை வேறினது-இப்படியாகக் கதையின் கதையை எழுத் தாளர்கள் எழுதினர்கள். அவற்றை யாவரும் சுவையோடு படித்து இன்புற்ருர்கள். காரணம், எழுத்தாளன் கதையை எப்படிச் சிருஷ்டிக்கிருன் என்ற உண்மை நிகழ்ச் சியை அறிய முடிந்ததுதான். எழுத்தாளனுடைய சிருஷ் டித் தொழிலில் உள்ள விநோதம் இனித்தது.

கம்பன் இராமாயணம் பாடினது, வில்லிபுத்துாரார் பாரதம் பாடினது, குளுட்யன் பிருகத் கதை பாடியது முதலியவை மிகவும் சுவாரஸ்யமான கதைகள். இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்களின் வரலாறுகள் அவை என்பது மட் டும் அன்று; இலக்கியத்தின் கதையையே அவை சொல்லு கின்றன. இக்காலத்துச் சிறுகதைகளுக்குக் கம்பாமா பணத்தை உவமை சொல்வது பொருத்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனல் கம்பராமாயணம் உருவான கதை பும், இக்காலத்தில் சில சிறுகதைகள் உருவான வரலாறும் சமானமான சுவையுடையன. அரசகுமாரி கருவுயிர்ப்ப அதும், ஏழைப் பெண் குழந்தை பெறுவதும் ஒரே வகை வேதனை, ஒரே வகை நிகழ்ச்சி, ஒரே வகை இன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/124&oldid=592232" இலிருந்து மீள்விக்கப்பட்டது