பக்கம்:பவள மல்லிகை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்குக் கால் உண்டு 119

உடையன அல்லவா? தாய்மை என்னும் பொதுமையுடன் ஒட்டியவை அவை.

வாழ்க்கையில் ஊறிப்போன மனசுக்குத் தன் அ.துப வங்களை கினைப்பதற்குச் சர்வ சுதந்தாம் உண்டு. அதைத் தடுக்க எந்த ஹிட்லராலும் முடியாது. அப்படி நினைத்த அநுபவங்களை வாயினலே சொல்வதற்கு, வேறு இடத் தில் வேறு சக்தர்ப்பத்தில் பழைய அநiபவத்தை இணைத் துச் சொல்வதற்கு முயல்வது மனிதன் இயல்பு. பழைய கிழவர்கள் அதிகமாகப் பேசுவதற்குக் காரணம் இந்தப் பழங்கதைகள் அவர்கள் திறத்தில் நீண்டிருப்பதுதான். எந்த நிகழ்ச்சியானுலும், அதற்குச் சமானமாகவோ, கூடு தல் குறைதலாகவோ மற்ருெரு நிகழ்ச்சி அவர் களுடைய கினைவேட்டிலிருந்து புறப்படும். அதைக் கேட்பதற்கு நமக்குச் சிரத்தை இல்லாமல் இருக்க லாம். ஆனல் அவர்களுக்கோ இப்போது நிகழும் நிகழ்ச்சி யைக் காட்டிலும் அந்தப் பழைய நிகழ்ச்சிதான் சுவா ரஸ்யம் உடையது. அது வெறும் நினைவளவிலே கின்று, இன்பதுன்பம் கோடியாக வாழ்க்கையைப் பாதிக்கும் நிலையைக் கடந்து விளங்குவதால் காவியம் போல அவர்களுக்குச் சுவைக்கிறது. காலமென்னும் தேனில் ஊறி கின்று தன்னுடைய துவர்ப்பையெல்லாம் போக்கி விட்டுத் தித்திக்கும் பண்டமாக ஆகிவிடுகிறது. அது.

எழுத்தாளர்களும் இந்த மனித இயல்புக்கு விலக் கானவர்கள் அல்ல. எழுத்தாளர்கள் என்ன? கவிஞர்களுக் கும் இந்தப் பழைய அநுபவ வாசனையைத் தாம் பாடும் கவிகளிலே இணைப்பது என்பது இயற்கைதான். ஆகவே கதாசிரியர்கள் தம்முடைய கதைகளில் பழைய உண்மைக் கதைகளாகிய தம் அதுபவ வரலாற்றை இணைத்து எழுதி வதுண்டு. எல்லாக் கதைகளிலும் இந்த அம்சம் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/125&oldid=592234" இலிருந்து மீள்விக்கப்பட்டது