பக்கம்:பவள மல்லிகை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பவள மல்லிகை

தோன்றியது. கண்ணன் கினேவாகவே வாழும் ஒரு பாத் திரம் என் கதையின் முக்கியப் பாத்திரமாக இருக்கவேண் டும் என்று கிட்டமிட்டேன். சின்னப் பெண்ணுக அந்தப் பாத்திரம் உருவாயிற்று; அம்புஜம் தோன்றினுள்." L ఘ} வருஷ்ங்களுக்கு முன் நான் திருவல்லிக்கேணியில் அதே குப்பமுத்துத் கெருவில் குடியிருந்தேன். அந்த வீட்டுக்குப் பின்புறத்தில் பவளமல்லிகை மரம் இருந்தது. ஒவ்வொரு நாளும் பூப்பொறுக்கப் பல குழந்தைகள் வருவார்கள். பெரும்பாலும் பெண் குழந்தைகளே வருவார்கள். அந்தக் காட்சி என் கதைக் கருவுக்கு ஊட்டம் அளித்தது. மற்ற நிகழ்ச்சிகளெல்லாம் கற்பனை.

இந்தக் கதை கலைமகளில் வந்தபோது இதைப்பாராட் டிப் பலர் எழுதினர்கள். முக்கியமாக ஒர் அன்பர், 'நான் உங்களுக்கு என்ன அபராதம் செய்தேன்! என்னே அழும்படி செய்துவிட்டீர்களே! என் கண்ணில் நீர் மல்கு வதைக் கண்டு எங்கள் வீட்டுக் குழந்தைகள் கூடச் சிரித் கார்கள்’ என்று ரஸ்மாகத் தம் அநுபவத்தை எழுதியிருந் தாா.

歡 普 - 普 豪

"கடன் பாண்டியன்’ என்ற கதையில் வரும் தங்தையின் மனமாற்றம் பல குடும்பங்களில் நிகழ்வதுதான். எனக்குத் தெரிந்த ஒருநண்பர், கதையில் வரும் கூன் பாண்டியரைப் போன்றவர். அவரை நினைத்த போதுதான் கதையின் கரு முளைத்தது. கதையின் ஆரம்பமும் முடிவும் பெரும்பாலும் உண்மை நிகழ்ச்சியை ஒட்டினவே, மற்றவை கதைக்கு வேண்டிய கையும் காலும் மூக்கும் முழியுமாகக் கற்பனை யால் படைத்தவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/128&oldid=592237" இலிருந்து மீள்விக்கப்பட்டது