பக்கம்:பவள மல்லிகை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்குக் கால் உண்டு 123

“பாசம்’ என்பது முழுக்க முழுக்க உண்மைக்கதை என்றே சொல்லவேண்டும். கதையைச் சொல்லுகின்ற 'கான் நான் அல்ல; என் மைத்துனன். அவன் திருக்கழுக் குன்றத்தில் நிகழ்ந்த இதை எனக்குச் சொன்னன். அவன் சொன்ன நிகழ்ச்சியையே சிறிது வருணனையும் கூட்டிக் கதையாக்கினேன். கதையைப் படித்தபிறகு என் மைத்துனன் என்ன சொன்னன் தெரியுமா? இதைப் போன்ற முதல்தரமான கதை உலகத்திலே சிலவே உண்டு. நீங்கள் எழுதிய கதைகளில் அற்புதமான சிலவற்றில் ஒன்று இது” என்று உள்ளம் பூரித்துச் சொன்னன். நான் அப்படி கினைக்கவில்லை. அவனுடைய உணர்ச்சிகளைச் சரியானபடி கதையில் உருவாக்கி விட்டேன் என்பதையே நான் தெரிந்து கொண்டேன். என்ன இருந்தாலும் அவர வர்கள் சொந்த அநுபவம் அவரவர்களுக்கு உயர்வு தானே? . - .

மற்றக் கதைகளில் உண்மை நிகழ்ச்சிகள் இவ்வளவு அதிகமாக இழையவில்லை. விசித்திர உலகத்தில் வரும் கிருஷ்ண யரின் உருவமும் இயல்பும் நான் அறிந்த ஒரு பக்தரிடம் கண்டவை; பஜனை செய்வதில் ஈடுபட்ட பக்தர் அவர். . மற்றப்படிக் கதை முழுவதும் வெறும் கற்பனே. கதை நிகழும் இடமாகிய கிருஷ்ணராயபுரம் கான் பிறந்த ஊர் ஆகையால் அதைப் புகுத்தும் கின்ைவு வந்தது.

சில வருஷங்களுக்கு முன் முதல் முறையாகப் பம் பாய் போயிருந்தேன். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற இலக்கிய விழாவுக்காகப் போனேன். அந்த நகரத் தில் உள்ள காட்சிகளையெல்லாம் கண்டேன். எலிபெண் டாக்குகைகளையும் பார்க்கவேண்டும் என்ற ஆசை எழுங் தது. அன்பர்கள் சிலரோடு காலையில் புறப்பட்டுச் சென்று மாலை வரையில் அந்தத் தீவில் தங்கி அங்கே உள்ள அற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/129&oldid=592247" இலிருந்து மீள்விக்கப்பட்டது