பக்கம்:பவள மல்லிகை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்குக் கால் உண்டு - 125.

கதை எழுத ஆரம்பித்ததற்கு அந்தப் பழைய நிகழ்ச்சியின் நினைவு சிறிது உதவியது. கதையின் மற்றப் பகுதிகள் வெறும் கற்பனை. -

புரட்டாசி மாதக் கலைமகள் இதழுக்கு நவராத்திரி சம்பந்தமாகக் கதை எழுதவேண்டும் என்ற கினேவிலே கொலுவும் மாப்பாச்சியும் தோன்றின. அதன் பிறகு மூளி மசப்பாச்சியும், அதற்கு ஜோடிமரப்பாச்சியும் வந்தன. எப். போதுமே கதை முழுவதையும் எழுதின பிறகே நாமகரணம். பண்ணுவது என் வழக்கம். இந்தக் கதைக்கு மூளி மரப் பாச்சி என்றுதான் முதலில் பெயர் வைத்தேன். பிறகு அது காதுக்கு இன்முக இல்லை என்று மாற்றிவிட்டேன்.

இந்த எட்டுக் கதைகளில் பவளமல்லிகை, கூன் பாண்டியன், ஜோடி மாப்பாச்சி என்ற மூன்றும் கல. மகளில் வெளியானவை. பாசம்’, ‘விசித்திர உலகம்' என் லும் இரண்டும் காண்டியம் பொங்கல்மலர்களிலும், ரத்தக் கண்ணிர்', 'பஞ்சகல்யாணிக் குதிரை' என்பவை 'ஆனந்த விகடன் தீபாவளி மலர்களிலும், 'யார்தெய்வம் என்பது தியாகி'யிலும் வெளிவந்தவை. . . . ;

பழைய உணர்ச்சிகளும் நினைவுகளும் கதையிலே இணைத்து உருவாக்குவது எழுத்தாளர்.உலகத்து வழக்கம். கதைகள் அதிகமாக எழுத எழுதச் சொந்த அநுபவங் களும் அதிகமாகப் பயன் படுகின்றன. அதிகமாகக் கதைகள் எழுதவேண்டிய வாய்ப்புப் பத்திரிகைகளில்ை ஏற்படுகின்றன. ஆகவே பத்திரிகைகள் உள்ளவரைக்கும் கதைகள் வரும்; கதைகள் எவ்வளவுக் கெவ்வளவு தேவையோ, அவ்வளவுக் கவ்வளவு எழுத்தாளர்கள் தாங்' கள் கண்டு கேட்டு அநுபவித்த வற்றைப் புகுத்த வாய்ப் புண்டு. கதையுலகம் வாழ, நாம் வாழும் உண்மையுலகம் வாழவேண்டும். இரண்டு உலகமும் வாழ்க ! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/131&oldid=592260" இலிருந்து மீள்விக்கப்பட்டது