பக்கம்:பவள மல்லிகை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 . பவள மல்லிகை

இது என்ன ஆச்சரியம் ! ஒருநாளும் இல்லாத திரு நாளாக வீட்டுக்கார அம்மாள் பவளமல்லிகை மரத்துக்கடி யில் காலையில் பூப்பொறுக்கிக்கொண்டிருந்தாள். அந்தக் கிழவர் துரத்தில் கின்றபடியே, ' நாழிகையாகி விட்டது” என்று சொல்லிக்கொண்டு கின்ருர்.

சில நிமிஷங்களில் இருவரும் பூவோடு புறப்பட்டார் கள். நான் ஒரே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன். அவர்கள் ரிக்ஷாவில் போனுர்கள். எனக்கு என்ன நடக் கிறதென்று பார்க்க ஆசை. நானும் ஒரு ரிக்ஷா வைத் துக்கொண்டு பின் தொடர்ந்தேன். வேலைக்காரியிடம் குழந்தையை விட்டுவிட்டு வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போனேன். அந்த இரண்டு பேரும் அம்புஜத்தின் வீட்டில் இறங்கினர்கள். நான் வேகம்ாகவே முன்னல் போனேன்.

இருவரும் உள்ளே நுழையும்போது பூக் கூடையை வீட்டுக்காரர் கையில் வாங்கிக்கொண்டார். அம்புஜத்துக் குப் பக்கத்தில் சென்ருர். அவர் கால் பின்ன லிட்டது. அப்படியே கூடையை அவளருகில் வைத்தார். கிற்கமுடி யாமல் உட்கார்த்துவிட்டார். -

இதென்ன? அவர் விக்கி விக்கி அல்லவா அழுகிருர்? எனக்கு இது கனவா கனவா என்று விளங்கவில்லை. ' குழந்தே, நான் பாவி குழந்தையில்லாத பாவி ! உன் பூப்போன்ற உள்ளத்தை வாட்டினேன். உன் காலே.ஒடித் தவன் கார்க்காான் அல்ல. நான்தான். இந்தா, அம்மா! இந்தப் பூவை வைத்துச் சொல்கிறேன். உன் மனசை நோகச் செய்ததற்குக் கடவுள் எனக்குத் தண்டனை காட்டும். உன் கால் செள்க்கியமாகட்டும். நீ மான்குட்டி தள்ளுவது போல மறுபடியும் என் வீட்டுக்கு வந்து பூப் பொறுக்கு வதை நான் பார்க்கவேண்டும்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/22&oldid=591956" இலிருந்து மீள்விக்கப்பட்டது