பக்கம்:பவள மல்லிகை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் பாண்டியன் 19

வளிலே அழுந்துவதாகத் தெரியவில்லை. புத்தகத்தையே கூர்ந்து நோக்கிப் பாராயணஞ் செய்யும்போது, பழக்கத்தி ல்ை உருவான இடங்கள் வந்தால் கண்ணை மூடிக்கொண்டு பாட்டைச் சொல்வார். அப்போதுதான் அவருக்கு அதிக உருக்கம் உண்டாகும். ஆனல் இன்ருே அவர் கண் புத்தகத்தைப் பார்ப்பதோடு கில்லாமல் இடை யிடையே, எதிரே கூடத்தின் மற்ருேர் ஒரத்தில் விளை யாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையின்மேல் பாய்ந்து கொண்டிருந்தது. -

நெடுங்காலம் பழக்கமாக இருந்த ஒரு நெறி இப் போது சற்றுத் திறம்புகிறது. அதாவது, என்ன வேடிக்கை யானுலும் ஒரே கினைவோடு தேவார பாரா யணம் செய்யும் அவர், வாய் தேவாரத்தைச் சொல்லிக் கொண்டிருக்க இடையிடையே கண்ணக் குழந்தையிடத் திலே போக்கினர். அதற்குக் காரணம்: அவர் உள்ளம் இப்போது தேவாரத்திற். பதியவில்லை. எங்கெங்கோ சுற்றி வட்டமிட்டுக்கொண் டிருக்கிறத. மின்சாரத்தின் மூல விசையை முடுக்கிவிட்டால் பலபல விதமான பொறிகளும் இயங்குகின்றன; விசிறி சுழல்கிறது; விளக்கு எரிகிறது. இப்படித்தான் அந்தக் குழந்தையின்மேல் பார்வை விழுந்த வுடன் அவர் சிந்தனை பெருவேகத்தோடு எங்கெங்கோ செல்கிறது. பல வருஷங்கள் பின்னுக்கு இழுத்துச் செல்கிறது. பல பல இடங்களுக்கு அழைத்துப் . போகிறது. - -

普 \, 螯 இதேமாதிரி ஒரு குழந்தையை அவர் சிந்தனை பற்று கிறது. முப்பது வருஷத்துக்கு முன்னே பார்க்கிறது. இதே வயசு, மூன்று பிராயம். தளதள வென்று பொலிவு பெற்ற முகமும் பின்னி உச்சிப் பூச் சூட்டிய தலையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/25&oldid=591959" இலிருந்து மீள்விக்கப்பட்டது