பக்கம்:பவள மல்லிகை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூன் பாண்டியன் . 21.

வாய் பாடவில்லை. சிந்தனை அவரை ஆட்கொண்டிருந்தது. சுவாரஸ்யமாக வாசித்துக் கொண்டிருந்தபோது திடீ ரென்று பிடிலின் தந்தி அறுந்து போவதுபோல முப்பது வருஷங்களுக்கு முன் பின்ளுேக்கிச் சென்று கொண் டிருந்த நினைவு பட்டென்று அறுந்து விட்டது. "ஏய்' என்று அவர் கூப்பிட்டார். "இதோ வந்துவிட்டேன்” என்று ஒரு பெண் குரல் எதிர் பேசியது. * : *

"குழந்தை எதையோ திருகுகிருன் கையிலே காயம் பட்டுவிடப் போகிறது. இங்கே பார்.' .. "இதோ வந்தேன்’ என்று சொல்லிக் கொண்டு அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியான 45 வயசுக்கு மேற் பட்ட அம்மாள் ஒருத்தி பிரசன்னமானுள். வந்து குழங் தையை அணைத்துக்கொண்டு, "போக்கிரி, கையைப் பொத்துக் கொள்ளாதே’ என்று சொல்லித் தானே அந்த விசையை முடுக்கிக் கீழே மோட்டாரை ஓடவிட்டாள். அது கிர்ரென்று வட்டமாகச் சுழித்து ஓடியது. "பாத்தி, மோத்தார்; தாத்தா, மோத்தார்' என்று தன் மழலை மொழியால் பேசிக் குது.ாகலம் அடைந்தது குழந்தை. г. தாத்தா என்ற சொல் முதலியார் காதில் விழுந்தது. அந்த ஒலி மற்ருெரு முறை சிந்தனே உலகத்தின் வாசலைத் திறந்துவிட்டது. தேவாாம் திறந்திருந்தும் அதை உள்ளத்திலே மூடிவிட்டு, அந்த உலகத்திலே மறுபடியும் புகுந்தார் அவர். . -

தாத்தா என்று மழலை மொழியிலே அழைக்கும் இந்த இனிய சொல்லுக்கு முதலியார் தம்மை விஷயமாக வைத்துக்கொள்ள முடியவில்லையே! அப்பா என்று முப் பது வருஷத்துக்கு முன் அழைத்த குழந்தையின் ஞாபகங் தான் அவருக்கு வந்தது. கிரமமாக இருந்தால் தாத்தா என்று உரிமையோடு அழைக்கும் குழந்தை அவர் வீட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/27&oldid=591961" இலிருந்து மீள்விக்கப்பட்டது