பக்கம்:பவள மல்லிகை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பவள மல்லிகை

பலர் தூது விடத் தொடங்கினர். 'இப்போது என்ன அவசரம்?" என்று சுருக்கமாக விடை அளித்துவந்தாலும் முதலியாருக்கு உள்ளுற ஆசை ஒன்று இருந்தது. சல்ல குலமாகச் சைவப்பற்றுள்ள குடும்பத்தில் பெண் கொள்ள வேண்டுமென்பது அவர் கருத்து. அதுவும் நல்ல ஸ்தல மாக - திருவாரூரைப் போலச் சிறந்த ஸ்தலமாக இருக்க வேண்டும். அவனுக்குக் கல்யாண மாகிவிட்டால் பிறகு குடும்பப் பொறுப்பு அவனுக்கு வந்துவிடும். கடையை யும் அவனிடம் ஒப்படைத்த விட்டு, வருஷத்தில் சில மாதங்கள் அந்த ஸ்தலத்துக்குப் போய்த் தங்கி யிருக்க லாம் அல்லவா? சம்பந்தியின் ஆதரவில் அல்ல. ஒரு வீடு பேசித் தனியே இருப்பதாகத்தான் ஞாபகம். என்ருலும் அண்டை அயலில் உறவினர் இருக்கும் இடத்தில் வசிப் பதைப்போல, முகமறியாத மூன்ருவது மனிதர் இருக்கும் இடம் வருமா? - - -

உலகவாழ்வில் குடும்பத்தைப் பாதக க்கு ம் பொறுப்பை மெல்ல முத்துவின் கையில் நழுவ விட்டுத் தாம் பூஜை, தேவார பாராயணம், ஸ்தல யாத்திரை இவைகளோடு கின்று இன்புறலாம் என்று ஒவ்வொரு கண மும் அவர் திட்டம் போட்டு வந்தார். அந்தத் திட்டம் அவ்வளவுக்கும் அஸ்திவாரமாக, நல்ல குடும்பத்தில் சம் பந்தம் செய்துகொள்வது என்ற காரியம் இருந்தது. பல் பல பெண் களின் ஜாதகங்கள் வந்தன. - நேர்முகமாகவும் சிபாரிசு மூலமாகவும் அகஸ்மாத்தாகவும் கல்யாணத்துக்கு இருக்கும் பெண்கள் உள்ள சைவக் குடும்பங்களைப்பற்றி அவர் அறிந்து கொண்டார். - -

இறைவன் திருவருளால் நல்ல இடத்திலிருந்து தம் வீட்டுக்கு அலங்காரமாக ஒரு பெண் வருவாளென்றும், அவள் கையிலே வீட்டுப் பொறுப்பை ஒப்பித்துவிட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/30&oldid=591964" இலிருந்து மீள்விக்கப்பட்டது