பக்கம்:பவள மல்லிகை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூன் பாண்டியன் £5.

தம் மனைவியும் ஒய்வு பெறலாம் என்றும் அவர் எண்ணி ஞர். கலயாத்திரை முதலிய காரியங்களுக்கு மனேவி இல்லாமல் முடியுமா?

2

பி. ஏ. வகுப்பில் முத்து படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய படிப்பின் முன்னேற்றத்தைப் பற்றிய செய்தி முதலியார் காகில் விழும்போதெல்லாம் அவருக் குச் சந்தோஷம் உண்டாகி வந்தது. ஆனல் ஒரு நாள் யாரோ சென்னையிலிருந்து வந்த நண்பர் ஒருவர், அவ ருடைய சந்தோஷத்திற்கிடையே சிறிது நஞ்சைக் கலந்துவிட்டார். -

என்ன சொல்வதுபோங்கள், உலகம் போகிற போக் கை. ஆசாரமாவது, ஜாதியாவது! எல்லாம் அடியோடு தொலைந்து போகப் போகிறது! நானும் நீங்களும் பூஜைப் பெட்டியையும் தேவாரத்தையும் கட்டிக்கொண்டு அழு கிருேம். நம்முடைய பிள்ளைகளோ காலேஜில் படிக்கிருே. மென்ற பெயரை வைத்துக் கொண்டு யார் யாரையோ கட்டிக் கொண்டு அழுகிருர்கள்” என்ருர் வந்தவர். அவர் பழைய நாள் பேர்வழி. -

வைத்தியகாக முதலியார் காதில் இந்த வார்த்தை விழுத்தவுடன் அவருடைய கிாேப்பு. முத்துவினிடம்

சென்றது. - . - -

"என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? எல்லோரும் அப்படிப் போய்விடுகிரு.ர்களா? ஏதோ புதுப்பணம் படைத்த குடும்பங்களில் அப்படி நடக்கும். பரம்பரை யோகச் சைவராக இருக்கும் குடும்பங்களிலே பிறந்த பிள்ளைகள் அப்படி இருப்பார்களா? தாயார் தகப்பனுர் எப்படி இருக்கிருர்களோ, அதைப் பொறுத்தது பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/31&oldid=591965" இலிருந்து மீள்விக்கப்பட்டது