பக்கம்:பவள மல்லிகை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் பாண்டியன் 27

"அது கிடக்கிறது, விடுங்கள். உலகம் நாசமாய்ப் போகட்டும். முத்து எப்போதாவது உங்களைச் சந்திப்ப துண்டா? அதைச் சொல்லுங்கள்.'-அப்பாவி முதலியார் அவர் பேசுவதற்கும் தாம் கேட்பதற்கும் சம்பந்தமே. இல்லை என்று கினைத்தார்! y

“முத்துவும் அந்தக் காலேஜில்தானே படிக்கிருன்? அவ லுக்கு மாத்திரம் தனிப் போக்கு ஒன்று ஏற்படுமா?அப்படி ஏற்பட்டாலும் மற்றப் பிள்ளைகள் சும்மா விட்டுவிடு வார்களா?”

'அவன் என்ருகப் படிக்கிருனென்றுதானே கேள் விப் படுகிறேன்? பரீட்சையில் நல்ல மார்க்கு வாங்கி யிருக்கிருன்!' .

'நானுந்தான் எவ்வளவோ கேள்விப்படுகிறேன். பரீட்சை மார்க்கைப்பற்றி எனக்குத் தெரியாது. பையன் நீங்கள் கினைக்கிறபடி இல்லை. குலம் கோத்திரம் தெரிந்து சீக்கிரம் அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள்.” .

"அவனைப்பற்றி என்ன கேள்விப் பட்டீர்கள்? சொல்லுங்களேன்.” -

'சொல்லுவது என்ன இருக்கிறது? இவளுேடு ஒருத்தி படிக்கிருளாம். என்ன ஜாதியோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும்....”

“ஹா' என்று திடுக்கிட்டார் முதலியார்.

杀 鑫 米 உண்மையும் அதுதான். முத்துக்குமாரசாமி இப்

போது காதலுலகத்தில் பிரவேசித்துக் கொண்டிருந்தான். தன்னுடன் படிக்கும் கல்யாணியின் மேல் அவனுக்கு ஒரு கண் விழுந்தது. அவளுக்கோ இவன்மேல் இரண்டு கண்களும் விழுந்தன. மாதக்கணக்காகப் பழகுவதனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/33&oldid=591967" இலிருந்து மீள்விக்கப்பட்டது