பக்கம்:பவள மல்லிகை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பவள மல்லிகை

ஒருவரை ஒருவர் நன்முகத் தெரிந்து கொண்டார்கள். கல் யாணி சென்னையில் இருந்த ஒரு வியாபாரியின் பெண். யதிாாச பிள்ளைக்கு அவள் தன்முகப் படிக்கவேண்டு மென்று ஆசை. அவளும் நன்ருகப் படித்து வந்தாள். அறிவு அறிவை வியப்பது இயல்பு. கல்வியில் சிறந்த அவள் முத்துவின் அறிவுத் திறமையிலே ஈடு பட்டாள். முறை தவறி நடக்கும் குணம் அவளிடம் இல்லை. அவ லுடைய திறமையையும் குணத்தையும் தன் தகப்ப குருக்கு எடுத்துரைத்து அவனைத் தன் குடும்பத் தோழ கைச் செய்தாள். ஆகவே முத்து அடிக்கடி யதிகாச பிள்ளை வீட்டுக்கு வந்து பழகத் தொடங்கின்ை; நெருங் கிய உறவினர் வீட்டில் பழகுவதைப் போலப் பழகினன். சில விசேஷ நாட்களில் அவ்வீட்டில் விருந்துண்டான்.

பாம சைவராகிய முதலியாருக்கு இந்த விஷயமெல் லாம் தெரியாது. முத்துவும் எழுதவில்லை. கல்யாணியிடம் அவன் மனம் சென்றது, இயற்கையாகவும் நியாயமாக வுமே அவனுக்குப் பட்டது. ஜாதியோ, சமயமோ அவன் கண்ணுக்கு முன் தடையாக கிற்கவில்லை. இன்னும் ஒரு வருஷம் படித்த பிறகு இருவரும் பி. ஏ. பரீட்சையில் தேர்ச்சி பெறுவார்கள். பிறகு இருவரும் பிரியப் போகி மூர்களா? இல்லை, இல்லை; வாழ்க்கைப் பள்ளியில் ஒன் முய்ப் புகுவார்கள். இதுவே முத்துவின் கனவு. கல்யாணி யும் அப்படித்தான் கனவு கண்டிருக்க வேண்டும். அவள் சுதந்தரத்தைக் கட்டுப்படுத்துவார் ஒருவரும் இல்லை. அப்படி இருந்தால் முதலில் அவளைப் படிக்கவே வைத் திருக்க மாட்டார்களே! - -

事 . x х + - அடுத்த வருஷம் கிறிஸ்துமஸ் லீவுக்கு முத்து கிரிசிா புரம் வரவில்லை. மார்ச்சுப் பரீட்சைக்கு இப்போதிருந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/34&oldid=591968" இலிருந்து மீள்விக்கப்பட்டது