பக்கம்:பவள மல்லிகை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் பாண்டியன் - 33

" நாளுவது போய் வேறு ஒருவர் வீட்டில் இருந்து பார்த்துவிட்டு வருகிறேன் ' என்று கெஞ்சுவாள்.

“ பார்த்துவிட்டு வரவேண்டியதில்லை. அங்கேயே தங்கிவிடலாம்' என்று கொதிப்போடு பதில் சொல்வார் முதலியார். அதற்குமேல் பேச வகை இராது.

3

சில காலமாக-சில மாசங்களாக - முதலியாருடைய மனைவி தன் பிள்ளையைப்பற்றி அவரிடம் பேசுவதே இல்லை. காரணம்: அவள் இப்போது ஒரு குழந்தையிடம் தன் அன்பு முழுவதையும் வைக்க ஆரம்பித்தாள். அது முதலியாருக்கு ஒரு வகையில் ஆறுதல் தந்தது.

ஒரு நாள் முதலியாருடைய மனைவி கோயிலுக்குப் போய்விட்டு வரும்போது ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தாள். குழந்தையின் எழிலும் சுறசுறுப்பும் முதலியாரின் உள்ளத்தைக் கவர்ந்தன.

எங்கே இந்தச் சிநேகம் பிடித்தாய் ?’ என்று கேட் டார் முதலியார்.

அவர் மனைவி அவருக்குப் பதில் சொல்லாமலே, * மங்கையர்க்கரசி ' என்று கூப்பிட்டாள். நேரே உள்ளே சென்ற ஒரு பெண் வந்து முதலியாரை சமஸ்காரம் செய் தாள். குழந்தையின் தாய் அவள். முதலியார் மனைவி, “ கோவிலுக்குப் பக்கத்தில் குடியிருக்கிருர்கள். கான் அடிக்கடி கோவிலில் சந்திக்கிறதுண்டு. நல்ல பெண். தேவாரம் வெகு அழகாகப் பாடுகிருள். இந்தக் குழந்தை யைப் பாருங்கள், என்ன அழகாக இருக்கிறது !” என்று சொல்லிக் குழந்தையை முதலியார் அருகில் விட்டாள்.

முதலியார் குழந்தையை ஏற இறங்கப் பார்த்தார். மெல்ல எடுத்துக்கொண்டார். குழந்தை அழவில்லை;

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/39&oldid=591973" இலிருந்து மீள்விக்கப்பட்டது