பக்கம்:பவள மல்லிகை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் 45.

கள் உண்டு; எவ்வளவு குறைத்துக் கேட்டாலும் கோபப் படாமல்,"கட்டாதம்மா! ஏழை வாயில் மண்ணைப்போடா தீர்கள் ” என்று சீனக் குரலில் எடுத்துச் சொல்கிறவர் களும் உண்டு. இப்படி விற்கிறவர் கட்சியில் பலபல வகை மனித உள்ளங்களைப் பார்க்கச் சந்தர்ப்பம் உண்டாயிற்று. ஆளுல் வாங்குகிறவர் கட்சியில் இரண்டே பேர் ; என் தாயும் மனைவியும். அவர்களிடம் ஒரே மாதிரி சுபாவங் தான் நான் கண்டேன். கூடைக்காரி ஒரு விலை சொன் ல்ை, உடனே குறைத்துக் கேட்பது, பட்டணத்தில் கூட இந்தக் கிராக்கி இல்லை' என்று பொய்யும் கற்பனையும் கலந்து பேசுவது-இப்படியாக ஒரே ரீதியில் எங்கள் வீட்டில் உள்ளவர்களின் போக்கு இருந்தது.

ஒரு காளைக்குக் குறைந்தது இரண்டு மூன்று வியா பாரமாவது நடக்கும்; இரண்டு மூன்று சுவாரஸ்யமான காட்சிகளை நான் பார்ப்பேன். காட்சிகள் என்பதை விடச் சம்பவங்கள் என்றே சொல்லலாம். என் மனத்தில் ஆழப் பதிந்துவிடும் அவற்றைச் சம்பவங்கள் என்று சொல்வது. தான் பொருத்தம். காட்சி, பேச்சு, மனப்பாங்கு, இத்தனை யும் அவற்றில் இருந்தன.

காலை நேரம், பத்துமணி இருக்கும். ஆம், அதைத் தான் முன்பே சொல்லி விட்டேனே!

குளத்தில் ரோடிவிட்டு வந்து சமையல் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்கும் அம்மா காகில், வாசலில் எதையாவது விற்கும் மனிதர்களின் குரல் எவ்வளவு மெது வாக இருந்தாலும் விழுந்து விடும். அதோ வாசலில், என்னவோ போகிறது ! போய்க் 'கூப்பிடு ' எனறு தன் மருமகளே ஏவுவாள். குழந்தைக்குப் பால் புகட்டித் துரளி யில் போட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் என் மனைவி

உடனே வீதிக்குப் போய்க் கூடைக்காரியைக் கூப்பிடுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/51&oldid=592017" இலிருந்து மீள்விக்கப்பட்டது