பக்கம்:பவள மல்லிகை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் - 49

'பத்து ரூபாய்க்கும் விற்கலாம். ஆல்ை முறம் மாத் திரம் மூங்கிலாக இருக்கக்கூடாது. வெங்கலமா இருக் கனும் ' என்று சொல்லிப் புன் முறுவல் பூத்தாள் அம்மா. s - “ வெங்கல முறமா? அது எதுக்கு உதவும் அம்மா? இந்த முறந்தானே கண்ணுக்கு அழகு? காரியத்துக்கு எளிசு விலையும் குறைவு ?"

'அட இவளுக்கும் விளம்பரக் கலையில் பயிற்சி இருக் கிறதே !’ என்று நான் ஆச்சரியப்பட்டேன். -

" சரி, சரி, விலையைச் சொல்லு' என்ருள் அம்மா.

" அதுதான் சொன்னேனே ரெண்டும் முக்கால் ரூபாய் ; அதுக்குக் குறைவில்லை. வேனுமானல் வாங் கிக்கோ ; இல்லையின் ஞ, கடை வீதிக்குப் போய் வித்து விட்டு வரேன். '

  • மகராஜியாப் போயிட்டு வா. முக்கால் ரூபாய் கொடுத்து வாங்குகிற மகாராஜன் அங்கே, நீ வரவில்லை வால்ல்ையின்னு காத்துக்கொண்டிருக்கான். போய் வித்து விட்டுவா. ' . х

" சரி, உங்களுக்கு வேணுமா ?”

"வேனும்; ஆனல் ெேசால்கிற விலக்கு வேண்டாம்.'

' என்னதான் விலை குடுப்பிங்க?"

‘ எட்டணுவுக்கு மேலே ஒரு தம்பிடியும் குடுக்க மாட்டேன். х .

அநேகமாக வருகிறவர் சொல்லும் விலையில் பாதிக் குக் கேட்பது அம்மா வழக்கம். இந்தத் தடவை பெரிய . மனசு பண்ணி மூன்றில் இரண்டு பங்குக்குக் கேட்டு விட் டாள். அதிலிருந்து முறம் வீட்டுக்கு எவ்வளவு அவசியம் என்பதை ஊகித்துக் கொண்டேன். .

4 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/55&oldid=592031" இலிருந்து மீள்விக்கப்பட்டது