பக்கம்:பவள மல்லிகை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பவள மல்லிகை

' என்னம்மா, ஒரே யடியாக் கொறைச்சுக் கேக்க மீங்க. மூங்கில் வெலையெல்லாம் எறிப் போயிருக்குங்க. நாங்க செஞ்ச வேலைக்குக் கூலி என்ன மிஞ்சப் போவுது? 1 ஆமாமா ; நீ இந்தப் பட்சி தீர்த்தத்துக்கு வருகிற வர்களிடம் முறம் நஷ்டத்துக்கு வித்துப் புண்ணியம் சம்பாதிக்கிறையோ? கூலியே இல்லை என்கிறையே 1 அப்படியான இந்தத் தொழில் எதுக்கு? வேறு ஏதாவது வியாபாரம் செய்யலாமே..”

" பதினோணுக்குக் குடுக்கறேன்.” அடே ரொம்பக் கொறைச்சுக்கொண்டுவிட்டாயே!” என்று ம்ஜனவி பரிகாசத் தொனியில் சொல்லிவிட்டு என் இனப் பார்த்தாள். தானும் இந்தப் போஞ் செய்யும் கலையில் பயிற்சி பெற்று வருவதை நான் தெரிந்துகொள்ள வேண்டு மென்று பார்த்தாள் போலும் ! நானே முறம் கட்டும் தொழிலில் எத்தனை கஷ்டம் இருக்குமோ என்று சிந்தித் துக் கொண்டிருந்தேன். சம்பாஷணை நீண்டு கொண்டே இருந்தது. வாதப் பிரதி வாதங்கள் ஒன்றுக்கொன்று சளேக்காமல் இருந்தன. -

அப்போது உள்ளே குழந்தை அழுதது. அதன் ஒலியை என் மனைவி காதில் வாங்கிக்கொண்டாளோ, இல்லையோ, தெரியவில்லை. திடீரென்று முறக்காரி, ‘சரி, ஒன்பதளுவாவது குடுங்க. கோமாயிடுத்து ' என்று பா பரப்புடன் கூறினுள். அது வரையில் கிதானமாகப்பேசிய வள், பதினோணுவிலே பிடிவாதமாக கின்று கொண்டி ருந்தவள், அப்போது அவ்வளவு பரபரப்பாகப் பேசினது எனக்கு விளங்காத புதிராக இருந்தது. தன்னுடைய வாதங்கள் வெற்றி பெற்றன என்ற சந்தோஷம் என் அன் அனயின் முகத்தில் ஒளிர்ந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/56&oldid=592032" இலிருந்து மீள்விக்கப்பட்டது