பக்கம்:பவள மல்லிகை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசித்திர உலகம் 57

கிறேன். பிறகு பகவான் கிருபை இருந்தால் இந்த

விருத்தியையே போக்கி விடலாம்.”

என் தகப்பனுருக்கு அவர் சொன்னது விளங்க வில்லை. மனைவியை இழந்த கிருஷ்ணையர் தன்னர் தனி பாகவே வாழ்ந்து வந்தார். நாலைந்து வருஷம் என்று அவர் போட்ட கெடு எதைக் குறிக்கிறதென்று விளங்க வில்லை. அவர் அவ்வளவு காலந்தான் ஜீவித்திருப்பா ரென்று எண்ணுகிருமா? .

"சே சே! அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் தீர்க் காயுசாகப் பகவத் பக்தி பண்ணிக்கொண்டு வாழ வேண்டும்’ என்று என் தகப்பளுர் சொன்னர்.

வாழலாம். பகவான் மனசு வைத்தால் காலையில் எழுந்து ஜாலாத் தட்டி ஊர் சுற்றும் வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்தபடியே பஜனை பண்ணிக்கொண்டு வாழலாம். வாழ முடியு மென்மதான் நம்புகிறேன்.”

விஷயம் விளங்காமல் மயங்கிய என் தந்தையார், 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே!” என்ருர். -

“ என் பையனே என் தங்கை வீட்டில் விட்டிருக் கிறேன். அலன் படித்துக் கொண்டிருக்கிருன். சாலைந்து வருஷத்தில் படிப்பு முடிந்துவிடும். பிறகு ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா? அவனுக்குக் கல் யாணம் பண்ணிவைத்துக் குடியும் குடித்தனமுமாக வாழப் பண்ணினல் நமக்கு என்ன குறைவு? ராஜரிஷி போல இருக்கலாம்.”

இதை அவர் சொல்லும்போது, எடுப்பான தொனி யிலே சொன்னுர், அவர் உள்ளம் எவ்வளவு உறுதியான கற்பனையைச் செய்தது என்பதை அது காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/63&oldid=592056" இலிருந்து மீள்விக்கப்பட்டது