பக்கம்:பவள மல்லிகை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசித்திர உலகம் 61

' விஷயத்தைத் தெளிவாகச் சொல்லப்பா'

"பையனுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆயிற்று. போலீஸ் இலாகாவில் உத்தியோகமும் ஆயிற்று. இவர் அவளுேடு போய் வாழலாமென்றுதான் நினைத்தார். அவன் தனியே குடித்தனம் நடத்தும்போது சிலதடவை: போய்விட்டும் வந்தார். அவருடைய பிள்ளை, நீங்கள் கிருஷ்ணராயபுரத்திலேயே சுகமாக இருங்கள். நான் ஊர் ஊராகச் சுற்றவேண்டி யிருக்கும். உங்களுக்கு வீண் அலைச்சல் எதற்கு ?. மாசம் மாசம் செலவுக்குப் பணம் அனுப்பிவிடுகிறேன்' என்ருளும், வெகு காலமாக நம்பிக்கையோடு காத்திருந்தவர் இவர். அலைச்சல் என் னப்பா ? உன்ளுேடு இருப்பதுதான் எனக்குச் செளக்கி யம். இனிமேல் எனக்கு ஊர் நீ இருக்குமிடத்தான்' என்ரு சாம். அவன், உங்களுக்குச் செளக்கியமாக இருக் தால் போதுமா? எங்களுக்குச் கெளக்கியம் வேண்டாமா?" என்ருளும். அந்த வார்த்தையை இவர் கேட்டுத் திடுக் கிட்டுப் போனு ராம். போலீஸ் இலாகாவுக்கு ஏற்ற ஆசாமிதான் அவன்.' - . . . -

போலீஸ் இலாகா என்ருல் எல்லோருமே அப்படித் தான் இருக்கிரு.ர்களா? கர்நாலிலும் ஒரு போலீஸ் சூபரிண் டெண்டெண்ட் இருக்கிருர். அவரைப் பற்றி ஊரே புகழ் கிறதே எத்தனை பேருக்கு உபகாரச் சம்பளம் கொடுக் கிருர் எத்தனே எழைகளுக்குத் தானம் செய்கிருர்! தமிழ் நாட்டவாாகையால் எனக்கு நன்முகப் பழக்கமாகி, விட்டார். ராமாமி ஐயர் என்ருல் கர்நூலில் தெரியாத, வர்களே இல்லை. அவருடைய தான தர்மத்தைப் பாராட்டாதவர்களும் இல்லை. அவர் மாதிரி ஒரு பிள்ளை இவருக்கு இருந்திருக்கக் கூடாதா? இவரைக் கண்ணிலே வைத்து இமையிலே மூடுவாரே உலகமே விசித்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/67&oldid=592073" இலிருந்து மீள்விக்கப்பட்டது