பக்கம்:பவள மல்லிகை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பவள மல்லிகை

மானது. அவருக்கு இவரைப் போல ஒரு தந்தை இல்லை; இவருக்கு அவரைப்போல ஒரு தனயன் இல்லை. கொடாக் கண்டனுக்குக் கர்ணனைப் போன்ற பிள்ளையும், சாதுவுக்குப் பிடாரி போன்ற மனேவியுமாக இணைக்கும் விதியை வியப்பதா? வைவதா? -

' ராமா!'-காவிரியிலிருந்து வந்துவிட்டார் கிருஷ் ணேயர். அவரைக் கண்டவுடன் எனக்கு என்னவோ தோன்றியது; கீழே விழுந்து நமஸ்காரம் செய்தேன். “யார், தெரியவில்லையே!” என்ருர். இன்னுருடைய பிள்ளையென்று சொன்னேன்.

" அவரா? மிகவும் நல்லவராயிற்றே இப்போது எங்கே இருக்கிருர்?'

“பகவானுடைய பாதாள விந்தத்தைச் சேர்ந்து விட்டார்.'

"அப்படியா? நீ எங்கேயப்பா இருக்கிருய்?’ என்று ஆகவோடு கேட்டார்.

'கர்நூலில் இருக்கிறேன்.' 'கர்நூலா '-சிறிது நேரம் அவர் யோசனை செய் தார். பிறகு, 'குழந்தைகள் உண்டா?' என்று கேஷ்ம சமாசாரம் விசாரிக்கலானர். நான் யந்திரத்தைப் போலப் பதில் சொன்னேனே ஒழிய, அவரை ஒன்றும் கேட்க வில்லை. கேட்கவேண்டுமென்ற ஆசை மாத்திரம் இருந்தது. நடு நடுவிலே கேட்க முயன்றேன். வாய் வாவில்லை. கடைசி யில் துணிந்துவிட்டேன். 'உங்கள் பிள்ளை இப்போது எங்கே இருக்கிருர்?' என்று கேட்டேன். -

"ராமா....என்ன கேட்கிருய்? என் பிள்ளைய? ாாமன?...இதோ இருக்கிருனே! ' என்று மடத்தில் இருந்த ராம படத்தைக் காட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/68&oldid=592077" இலிருந்து மீள்விக்கப்பட்டது