பக்கம்:பவள மல்லிகை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்தக் கண்ணிர் 69

கேரம் இங்கே தங்கினல் ராத்திரி வந்து விடும். சாத்திரி வேளையில் இத்தகைய இடங்களில் தங்குவது அபாயம். நம்முடன் வந்திருக்கிறவர்கள் தம்முடைய வீட்டையும் குடும்பத்தையும் கினைந்து எங்குகிறர்கள். அவர்களை எப் படி மீண்டும் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்ற கவலை சிறிதுகூட இல்லாமல் நீ குகையென்றும் சிற்ப மென்றும் பேசுகிருயே!” என்று மாணிக்கம் கூறிஞன்.

"வீடும் குடும்பமும், சோறும் சுகமும் தினந்தோறும் இருக்கிற கவலைகள். அவைகளை மறந்துவிட்டு ஒரு கண மாவது இருக்க வகை உண்டா : கண் முன்னலே கிற்கும் இந்த இயற்கை அழகிலே கருத்தைச் செலுத்தாமல் இங்கு வத்தும் கவலைதான அட பாழும் மனித ஜன்மமே! இது வரைக்கும் இங்கே சாம் வந்ததில்லை. எப்படியோ வந்து விட்டோம். எதிர்பாராத அழகைப் பார்க்கிருேம். இதை சசிக்க உனக்கு மனசு வாவில்லையே! அவ்வளவு குரு

ஞகவா போய்விட்டாய்?"

மாணிக்கம் மேலே பேச்சை ஒட்ட விரும்பவில்லை. மற்ற நண்பர்கள் நாலைந்துபேரும் அவனும் சேர்ந்து அச் தத் தீவை ஆராயத் தொடங்கினர்கள். லேனும் உடன் சென்ருன். அங்கங்கே பிரம்மாண்டமான தேன் கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன. சில இடங்களில் தேன் கசிந்து ஒடிக்கொண்டிருந்தது. ஒருவாறு அந்தக் காட்சிகளை யெல்லாம் கண்ட பிறகு ஊர்நோக்கிப் புறப்பட கினைத் தார்கள். புயல் ஒருவாறு ஒய்ந்திருந்தது. ல்ேலுக்கு அல் வளவு விரைவில் அவ்விடத்தை விட்டுப் போக மனம் இல்லை. இருந்தாலும் உடன் வந்தவர்கள் வற்புறுத்தும் போது என்ன செய்வது? மறுபடியும் யாவரும் புறப் பட்டு மும்பை வந்து சேர்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/75&oldid=592107" இலிருந்து மீள்விக்கப்பட்டது