பக்கம்:பவள மல்லிகை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2 பவள மல்லிகை

பார்த்துப் பாராட்டுவாள். லேனுடைய துண்மையான கலைத்திறனைக் கண்டு வியப்பாள்.

இப்பொழுதெல்லாம் நீலனுக்கு எப்போது பார்த் தாலும் யானைத் தீவைப் பற்றிய பேச்சுத்தான். 'என்ன வேலே வேண்டியிருக்கிறது! நம்முடைய உளிகளையெல் லாம் கொண்டுபோய்க் கடலில்தான் போடவேண்டும். அந்த மலையில் இருக்கும் பாறைகளைக் குடைந்து மண்ட பம் அமைப்பதாக இருந்தால் அந்த உளிகளுக்குக் கெளர வம் உண்டு’ என்று சொல்வான். சில சமயங்களில் மாணிக்கத்தினிடம் யானைத் தீவுக்கு மறுபடியும் போய்வா வேண்டுமென்ற வற்புறுத்துவான். அவனுடைய தொங் தாவு தாளாமல் மறுபடியும் ஒருநாள் மாணிக்கமும் வேறு சில நண்பர்களும் நீலனை அழைத்துக்கொண்டு யானைத் தீவுக்குப் போய் வந்தார்கள். ஆனல் இந்த முறை மாணிக் கமும் அந்தத் தீவின் அழகில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தான். ' அன்று வந்தபோது எப்படியாவது ஊர் போய்ச்சேரவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி விருந்தது. இப்பொழுதுதான் நிதானமாகப் பார்க்க முடி கிறது. லோ, நீ சொல்வது சரியே இந்த இடம் மிகவும் அழகாகத்தான் இருக்கிறது ' என்று கூறினன். நீல உடைய உற்சாகம் வளர்வதற்குக் கேட்பானேன் ? 'இந்த இடத்தில் நாம் குகைகளைக் குடைந்தால் என்ன?” என்று கேட்டான். - - - -

"நாம் மாத்திரம் குடைந்தால் போதுமா? வேறு நண் பர்களின் உதவியும் வேண்டாமா?' என்ருன் மாணிக்கம், "சிற்பக் கலையில் நம் தகப்பன்மார் சம்பாதித்து வைத்தது போதும். சாமும் சம்பாதித்திருக்கிருேம். மற்றவர்களிலும் கம்மைப்போல இருக்கிறவர்களை அழைப் போம். வருகிறவர்கள் வாட்டும். அதிகப்படி ஆட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/78&oldid=592119" இலிருந்து மீள்விக்கப்பட்டது