பக்கம்:பவள மல்லிகை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பவள மல்லிகை

உருவத்தில் கன்னி குலையாமல் இருப்பாளென்பது அவன் எண்ணம் போலும் அவன் காலத்தை மறந்து வேலை செய் தவன் அல்லவா? ஆல்ை காலம் அவனையோ, தங்கத்தை யோ மறக்குமா? அது தன் வேலையைச் செய்துகொண்டே யிருந்தது.

தங்கத்தை எதிர்பார்த்திருந்தான் நீலன். எட்டு வரு ஷங்கள் கடந்து போனதை அவன் அறியவில்லை. தங்கம் செய்தி கேட்டு ஆர்வத்தோடு வந்தாள். இந்த முறை தகப்பளுேடு வரவில்லை; மாணிக்கத்தோடு, தன் கணவனுகி விட்ட மாணிக்கத்தோடு, வந்தாள். -

ஒடத்திலிருந்து இறங்கி இருவரும் வந்தார்கள். ஐந்து வருஷமாகத் தன் நண்பனேப் பாராமல் இருந்தான் மாணிக்கம். இப்போது பார் க் க வ ந் தா ன். மாணிக்கமும் தங்கமும் இணைந்து வருவதைக் கண்டான் லேன். தங்கமா அது இளைத்துக் கிழடுதட்டிப் போயிருக் கிருளே இதென்ன? மாணிக்கத்தோடல்லவா வருகிருள்? அவனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாளோ ? அதற்குள் அவர்கள் இருவரும் நெருங்கிவிட்டார்கள். அவர்கள் கணவன் மனைவியாகி விட்டார்கள் என்பது பளிச்சென்று லேனுக்குப் பட்டுவிட்டது. அவள் கழுத் தில் தாலி ஏறியிருக்கிறதைப் பார்த்தான். அந்தக் கணத் தில் அவனிடம் ஒரு வெறி தலைப்பட்டது. அவ்வளவு காலமும் மறைந்திருந்த ஆவல் உச்ச நிலையில் இருந்தது. இப்போது அத்தனையும் ஏமாற்றமாகிவிட்டது. அவன் மூளை கலங்கியது போலாகிவிட்டது. வெகு வேகமாக ஓடி ன்ை, குகையை நோக்கி. ஒரு கடப்பாரையை எடுத் தான். வாயிலில் இருந்த சிற்பத்தைப் பார்த்து அடித்தான். எ சண்டாள உலகமே துரோக உலகமே ! உனக்கு இந்தச் சிற்பம் வேண்டாம். ஒழியட்டும் | பாறையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/88&oldid=592161" இலிருந்து மீள்விக்கப்பட்டது