பக்கம்:பவள மல்லிகை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாத்தக் கண்ணிர் §§

வீணுகவில்லை. நீ படைத்த சிற்பம் இனி எப்போதும் இந்தத் தீவைக் கலைக் கோயிலாக வைத்திருக்கப்போகி றது. நீ என்னை மணந்திருந்தால் இந்தப் படைப்பு ஏற்பட் டிருக்குமா? யோசித்துப் பார். உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளாதே. உனக்குக் கலையின்மேல் இருந்ததுதான் உண்மைக் காதல். என் மேல் உனக்குக் காதல் இருந்த தாகத் தோற்றியது வெறும் தோற்றம். இல்லாவிட்டால் என்னை மறந்து, உலகத்தையே மறந்து இந்த வேலையில் ஈடுபட்டிருப்பாயா ? ஒரு நாளா, இரண்டு நாளா ? எட்டு வருஷங்கள் கழிந்து விட்டனவே!"

' என்ன, எட்டு வருஷங்களா !” என்று கேட்டான் லேன். -

“ஆம் அண்ணு ஆம்; நீ காலத்தை வென்று விட்டாய்; காமத்தையும் வென்று விட்டாய். ஏதோ பழைய வாசனை ஒரு கணம் உன்னைப் பேயாட்டம் ஆட்டிவிட்டது.

'கின்று கிதானித்துப் பார். உன்னை மற்ற மனிதர் களைப் போலப் பெண்டு பிள்ளையுடன் வாழ்ந்து நாளைப் போக்கும்படி செய்ய எனக்கு மனம் இல்லை. நீ இந்தத் தெய்விகக் கலையை கிருமிக்கப் பிறந்தவன். உப்புக்கும் புளிக்கும் கவலைப்படப் பிறந்தவன் அல்ல. காசுக்கும் காமத்துக்கும் அடிமைப்படப் பிறந்தவன் அல்ல. உனக்கு ஏற்ற இடத்தில் உன்னே இருக்கச் செய்து, உன் கலத் திற மையை மலாவைத்தது பாவமானுல் அந்தப் பாவத்துக்கு முழுப் பொறுப்பாளி நானே என்று ஒப்புக்கொள் கிறேன்.” -

லேன் பெருமூச்சுவிட்டான். - ' கிமிர்ந்து பார் அண்ணு, எங்களே. உன் சிநேகி தசைப் பார். அவர் குடைந்த குகை அதோ இருக்கிறது. அங்கே வெறும் உளிதான் வேலை செய்தது. இங்கேயோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/91&oldid=592166" இலிருந்து மீள்விக்கப்பட்டது