பக்கம்:பவள மல்லிகை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘92 பவள மல்லிகை

என்று கேட்டாள். ராஜகுமாரன் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்து, "நடுவீதிப் பட்டணத்தில் கமலமலர் வீசும் தேவியை உபாசிக்கிறவன் னான். இதற்கு முன் இங்கே வந்ததில்லை” என்று குறிப்பாகச் சொன்னன். ராஜ குமாரிக்கு உண்மை புலப்பட்டது. அன்று அதோடு விட்டு விட்டாள்.

நான்காவது நாள் தானம் வாங்கும்போது, கமல. மலர்த் தேவியின் கருணை கிடைத்த துண்டாரி' என்று கேட்டாள் ராஜகுமாரி. கிடைக்கு மென்ற நம்பிக்கை யினுல் இன்னும் உபாசிக்கிறேன்” என்ருன் அரசகுமாரன். “தேவியைப் புறத்திலே வைத்துப்பூஜிக்கிருயா? அகத்திலே வைத்துத் தியானிக்கிருயா?' என்று அடுத்த கேள்வி வங் தது. 'முதலில் உயரத்தில் வைத்துப் பூஜித்தேன்; இப் போது கேருக்கு நேர் வைத்துப் பூஜிக்கிறேன். இனி மேல்தான் என் அகத்தில் வைத்துப் பூஜிக்க வேணும்" என்ருன். அன்று அதற்குமேல் பேச்சு நடக்கவில்லை. ராஜ குமாரியின் பேச்சுப் போக்கிலிருந்து அவளுக்கும் தன் மேல் ஆசை உண்டென்று அறிந்து கொண்டான் அசுவ பதி.

ராஜகுமாரியும் இேருக்கு நேரே அவனுடைய அங்க லட்சணங்களைக் கண்டு மகிழ்ந்தாள். அவளுக்கு எப்படி யாவது அவனுடன் போய் விட வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஆருவது நாள் அரசகுமாரன் பரதேசி களோடு தானம் வாங்குகையில், அரிசியைப் போடும் போது அதனுடன் ஒர் ஒலைச் சுருளையும் போட்டாள் ராஜகுமாரி. -

அசுவபதி கன் இருப்பிடத்திற்கு வந்து ஒலைக் சுரு ளைப் பிரித்துப் பார்த்தான். விஜயதசமியன்று இரவு அரச கும் மற்றவர்களும் அம்பு போடப் போய் விடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/98&oldid=592181" இலிருந்து மீள்விக்கப்பட்டது