பக்கம்:பவள மல்லிகை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்ச கல்யாணிக் குதிரை 93:

அந்தச் சமயத்தில் அந்தப் புரத்தின் பின் பக்கத். தில் வந்து காத்திருந்தால் நான் வருவேன், காங்கள் உடனே என்னே அழைத்துச் செல்லுங்கள்’ என்றிருந் தது. அவனுக்கு நிலை கொள்ளவில்லை. விஜயதசமி இன்னும் பல யுகங்களுக்குப் பின் வருவது போலத் தோன்றிற்று. - -

விஜயதசமி வந்தது. அசுவபதி தன் அசுவத்தோடு குறித்த இடத்தில் போய்க் காத்திருந்தான். ாாஜகுமாரி வத்தாள். உடனே அவளேயும் குதிரையின்மேல் ஏற்றிக் கொண்டு வேகமாகத் தன் தேசத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டான். இரவில் அருகிலே ஒர் ஊரில் தங்கி மறுநாள் துரக புரிக்குப் பிரயாணமானுன் இரண்டு நாட்களில் ஊர் வன்து சேர்ந்தான். - -

தன் குமாரன் ஓர் அழகிய ராஜகுமாரியுடன் வந்தி ருப்பது தெரிந்த துரங்கப்பிரியன், அப்பெண்ணின் வர லாற்றைத் தன் மைந்தனிட்ம் கேட்டர்ன். அசுவபதி உண்மையைச் சொல்லவில்லை. சுயம்வரம் நடை பெற்ற தாகவும், அதில் அரசகுமாரி தன்னை வரித்ததாகவும், அங்கே இருந்தவர்களுக்குப் பொருமை உண்டாகி யாவரும் தன்னை எதிர்த்ததாகவும், அவர்களை ஒருவாறு வென்று தன் காதலியைத் துனக்கிக் கொண்டுவந்து விட்ட தாகவும் அவன் சொன்னன். அதற்குமேல் அரசன் கவலை கொள்ளவில்லை. ஒரு நல்ல நாளில் சிறப்பாகத் தன் மக லுக்கும் அவன் அழைத்து வந்த அரசகுமாரிக்கும் மணம் முடித்து வைத்தான். - -- 被 荣, ,著

BPG நாள் அரசகுமாரிதன் காயகனிடத்தில் தன் விருப்பம் ஒன்றை வெளியிட்டாள். "தாங்கள் தங்கள் அருமையான பஞ்ச கல்யாணிக் குதிரையின்மேல் வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/99&oldid=592185" இலிருந்து மீள்விக்கப்பட்டது