பக்கம்:பவழபஸ்பம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

11

விட்டது. அவளுடைய முயற்சியாலும் உதவியாலுமே, அந்த அழகான மாடி வீட்டிலே, மக்கள் மன்றம் கூட ஆரம்பித்தது. மற்றவர்கள் பேசுவதைக் கேட்கும் நிலைமாறி, மருதம், பேச ஆரம்பித்தாள் மன்றத்திலே. அம்பலவாணரின் அருங்கவிதைகளால் உண்டான அரிய கருத்துக்களை, மருதவல்லி, மக்கள் மன்றத்திலே, எடுத்துக்கூறி, மன்றத்தினருக்கே புதிய பார்வை பிறக்கச் செய்தாள். சில புத்தக பிட்க்ஷுக்களும், மக்கள் மன்றத்தினருக்கு உதவி செய்யலாயினர். மன்னன், மக்களை ஏய்ப்பதில் மதி மிக்கவன், "மொட்டைத் தலையருக்கு மடமும், கொட்டை கட்டிகளுக்குக் கோயிலும் கட்டிக் கொடுத்துவிட்டால், சட்டமும் சாந்தியும் நிலைத்துவிடும், பயம் என்ன என்பது அவனுடைய ஆட்சிமுறை. மக்கள் மன்றத்தின் வளர்ச்சி பற்றி, அவன் கேள்விப்பட ஆரம்பித்ததே, மருதவல்லியின் புகழ் ஓங்கிய பிறகுதான். மன்னன் முதலிலே கொஞ்சம் கவலைப்பட்டான். பிறகோ, "ஓ! நமது நவ கோடியாரின் மனைவி மருதவல்லிதானே மக்கள் மன்றத்துக்கு ஜீவன். அவ்விதமாயின் அஞ்சவேண்டுவதில்லை. மன்றத்தின் சக்தியை, சிறியதோர் யுக்தியால் போக்கிவிட முடியும்" என்று யோசித்தான். வழக்கப்படி கைகட்டி வாய் பொத்தி நின்று காரியம் ஏதேனும் உண்டோ என்று கேட்டுவந்த வணிகர் நவகோடியாருக்கு, அன்று மன்னன் ஆசனம் தந்தான். குளிர்ந்த பானம் கொடுக்கச் செய்தான் பணியாளை ஏவி, புன்னகையுடன் பேசலானான்.

"நவ கோடியாரே!" நமது எல்லையில் உள்ள சந்தனக் காட்டிலே, இரண்டாண்டு கட்டை வெட்டி, விற்பனை செய்யும் உரிமையை உமக்கு அளித்திருக்கிறோம். அதற்கான பட்டயம் தயாராகிவிட்டது" என்றான் மன்னவன். நவகோடியார், மன்னர் முன் மண்டியிட்டுத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். "காட்டிலே சந்தனக் கட்டை வெட்டும் போது, ஏதேனும் ஆபத்து ஏற்படக்கூடுமல்லவா! அதற்காகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/12&oldid=1638497" இலிருந்து மீள்விக்கப்பட்டது