பக்கம்:பவழபஸ்பம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பவழ

அந்த ஆட்கொல்லிப் பார்வையை வேறு ஏமாளி மீது செலுத்து. போ! போ! இங்கு ஏன் நிற்கிறாய்! என் அருகே வராதே! சீ! எழுந்திரு, என் பக்கத்தில் ஏன் உட்காருகிறாய். பத்தினித் தங்கமல்லவா நீ! என்னைத் தொடலாமா! வேண்டாம், வேண்டாம், உன் சரசம்! விளக்கை அணைக்காதே! விடு! விடு! போடி மாயக்காரக் கள்ளி! யாருக்கு வேண்டும் உன் முத்தம் ஊஹும்.. முடியாது...வேண்டாம்.. கீழே தள்ளிவிடாதே... வெண்ணிலா! வெண்ணிலா... அன்பே! இவ்வளவு ஆசையை எங்கெ ஒளித்து வைத்துக் கொண்டிருந்தாய்...இந்த இன்பத்தைப் பெற நான் எவ்வளவு ஏங்கிக் கிடந்தேன்...இன்று தான் உன் திருஉள்ளம் இடமளித்ததா...தேனே! தேவாம்ருதமல்லவா தருகிறாய்! பேசாதே...நீ பேசவே கூடாது...உன்னை நான் விடவே மாட்டேன்...தன் உடலில் பாதியை உமையவளுக்குத் தந்த சிவமதக்காரனல்லவா, நான்! சக்தி! நம் சக்தி! ஆஹா! இந்த விருந்தை நவகோடியானல்லவா பெற்றுவந்தான்...கண்ணே! வெண்ணிலா!...கட்டளையிடு...என்ன செய்ய வேண்டும், அவனைக் காப்பாற்றுவதா, உனக்காகச் செய்கிறேன்...காரியம் முடிந்ததும் மறந்து விடுவாயோ என்னை...இந்த அன்பு நிலைத்து இருக்குமா...அடிக்கடி வருவாயல்லவா...அன்பே! இன்பமே...

மார்க்கத்தைக் கெடுப்பவர்களை விசாரித்துத் தண்டனை அளிப்பதற்காக நிறுவப்பட்ட தனி விசாரணைக் கூடத் தலைவன் தானப்பனின், படுக்கை அறைப்பதிகம் மேலே இருப்பது. வெண்ணிலாவுக்காக, தானப்பன் பதிகம் பொழிந்தான், அவள் அதற்கேற்ப அபிநயவிருந்தளித்தாள். நவகோடியார் தப்புவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. ஒளி நிரம்பிற்று அறையிலும் வெண்ணிலாவின் மனதிலும்.

நவகோடியாரைக் காப்பாற்றுவது மட்டுமா,சிறையிலே உள்ளவர்கள் அனைவரையும் விடுவிக்கவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/21&oldid=1638506" இலிருந்து மீள்விக்கப்பட்டது