பக்கம்:பவழபஸ்பம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

21

செய்யலாம், வெண்ணிலாவுக்காக, என்றுதான் தானப்பன் எண்ணினான், அவள் மகிழ்வளித்தபோது. கதிரவன் கிளம்பினான், மனதிலேயும் புது எண்ணம் உண்டாயிற்று. பொருளும் தட்டிப்பறித்தாக வேண்டும் என்று திட்டமிட்டான். நவகோடி வருவான் என்பது தெரியும், வெண்ணிலா,உருத்திராட்ச மாலையை அறுத்தபடி. அதைத்தானே அவனிடம், முன்னாள் இரவு சொன்னாள். மறந்து விடவா முடியும்!

"புத்தமதத்தைப் புகுத்த அல்லவா சதிசெய்கிறார்கள். இரக்கம் காட்டலாகாது இந்தத் தீயவர்களிடம்—திருநெறியை ஒழிக்கத் திட்டமிடுகிறார்கள்."

"ஏழை எளியவர்களை எப்படியோ மயக்கி விட்டார்கள்."

"இல்லாதவனிடம் ஆத்திரமூட்டினால் எதையும் செய்வானல்லவா!"

"ஒரு பிரபல வியாபாரியின் மனைவியும் இதிலே சேர்ந்திருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது."

"மன்னன் சீற்றத்துடன் இருக்கிறான்."

தானப்பன், அடுத்த தானப்பனுடன் உரையாடல் நடத்துகிறான், வெண்ணிலாவின் ஏற்பாட்டின்படி, நவகோடியார் வருகிறார், காலடி வீழ்கிறார்..

"ஐயனே! என்னைக் காப்பாற்றக் கோருகிறேன். என் மனைவி... மகாபாபி..."

"பதறாதே அப்பா, பதறாதே! என்ன செய்யலாம் உன் தீவினை அவள் உருவில்!"

"எப்படியாவது அவளை மீட்டாகவேண்டும். அவளுக்காக அல்ல. என் மனைவி இப்படிப்பட்டவள் என்று தெரிந்தால் என் மானம் போகும். வியாபாரம் நாசமாகும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/22&oldid=1638507" இலிருந்து மீள்விக்கப்பட்டது