பக்கம்:பவழபஸ்பம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

23

"பெயர் மருதவல்லியா! அழகான பெயர். வணிகரே! உமக்கு என்ன வயதாகிறது, அறுபது இராது?"

"ஐம்பது முடிந்தது — கவலையால் முதுமை தெரிகிறது."

"இந்த மருதம் இருபதாண்டுப் பெண்ணாமே..."

"ஏறக்குறைய முப்பது இருக்கும்..."

"சரி, மருதம், சித்த சுவாதீனமற்றவள் என்று கூறி விடுகிறேன்—மருத்துவருடைய வாக்குமூலமும் கிடைக்கச் செய்கிறேன்—விடுதலை கிடைத்துவிடும்—விவரமாக நான் ஏதும் கூறத் தேவையில்லை என்று கருதுகிறேன்—வில்வ பூசைக்காக, ஒரு சிறு கிராமத்தைத் தானமாகத் தந்தால் போதும்."

"கட்டளைப் படி நடந்துகொள்கிறேன்."

வெண்ணிலாவின் விருந்தும் சீமானின் காணிக்கையும் பலனளித்தது, சிறைகூட அதிகாரியிடம், நவகோடியார், தானப்பன் தந்த தாக்கீதையும் மருத்துவர் தந்த ஓலையையும் எடுத்துக்கொண்டு சென்றார்.

"அப்படியா? நானே சந்தேகப்பட்டேன்" என்றான் சிறைக்கூடத் தலைவன்.

"வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தேன் வெகுகாலமாக” என்றான் வணிகன்.

விடுதலைக்கு உத்தரவிட்டான்—விழுந்து விழுந்து சிரித்தாள் மருதவல்லி.

"பைத்யமா! எனக்கா! யார், என் கணவரா கூறினார்? உண்மைதானய்யா, உண்மைதான்! பலமுறை, பைத்யக்காரி, நமக்கு என்னகுறை, மாளிகை இருக்கிறது மனோகரமாக. செல்வம் இருக்கிறது ஏராளமாக, ஆனந்தமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/24&oldid=1638693" இலிருந்து மீள்விக்கப்பட்டது