பக்கம்:பவழபஸ்பம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

பவழ

கொண்டு வந்து சேர்த்தாகவேண்டும். அதை நீர் செய்து முடிக்காதவரையில் உம்மீது சந்தேகம் இருந்துகொண்டே தான் இருக்கும். எந்த நேரத்திலும் ஆபத்து வரக்கூடும், என்மீது நொந்துக்கொள்வதில் பயனில்லை" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான்.

வெண்ணிலாவை அபகரித்துக் கொண்டான்—செல்வமோ கரைந்துவிட்டது—மிரட்டுகிறான் முரட்டுத்தனமாக! என் செய்வது, என்று துக்கித்தார் நவகோடி. தானப்பன், இந்தப் புதிய போக்குக் கொண்டதற்குக் தக்க காரணமும் ஒன்றிருந்தது. புது மார்க்கம் சென்றவர்களை ஆசை காட்டியும் அச்ச மூட்டியும் பழைய மார்க்கத்துக்குத் திரும்பி வந்து சேரும்படி செய்வது திட்டமிட்டு நடந்து வந்தது. திரும்பி வந்தவர்கள் பழைய மார்க்கத்தின் பெருமைகளை எடுத்துக் கூறியதுடன், புதிய மார்க்கம் சேவலம் நாத்திகம் என்று கூறிவந்தனர். பழைய மார்க்கத் தரகர்கள் இந்த வேலையை வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.

"மயக்கமொழி கேட்டேன், கெட்டேன்!"

"மதுக்குடம் போலிருந்தது அவள் விழி, ஏய்க்கப்பட்டேன், நாத்திகனானேன்."

"மண்டையிலே ஒரே குடைச்சல், கை கால் இழுத்துக்கொண்டது. கண் அவிந்து—போயிற்று, ஆண்டவன் கனவில் தோன்றிப் பாபிகளை விட்டு விலகு! புண்ய மார்க்கத்தில் வந்து சேர் என்று கூறினார். தவறை உணர்ந்தேன், புதிய மார்க்கத்தை விட்டுத் தொலைத்தேன், உடனே தீவினை அகன்றது, தன்யனானேன்."

இங்ஙனம் தப்புப் பிரசாரம் நடைபெற்றது, தெளிவற்ற மக்கள் மனதிலே, மீண்டும் புராதன மார்க்கத்திடம் பற்றுப் பலமாயிற்று.

மருதவல்லி, புதிய மார்க்கத்தை விட்டொழித்து புராதன மார்க்கத்தை மீண்டும் வந்தடைந்தால், பெரும் வெற்றி கிட்டும்—விருது தனக்குக் கிடைக்க வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/29&oldid=1638737" இலிருந்து மீள்விக்கப்பட்டது