பக்கம்:பவழபஸ்பம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஸ்பம் 'துக்ககரமான சம்பவங்கள் தான்!" 33

  • கற்பழிக்கப்படுகிறார்கள் பெண்கள்! கட்டி வைத்துக்

கொளுத்தப்படுகிறார்கள் ஆடவர்கள்! "மனம் பதறத்தான் செய்யும்! கொதித்தெழும் மக்கள், எவ்வளவு வலிவுள்ள படையையும் எதிர்த்து ஒழிக்கும் வல்லமை பெறுவார்கள், சந்தேகமா? சிறைகளைத் தூள்தூள் ஆக்கிவிடமுடியும். சிங்காரக்கொலு மண்டபங்களை மண்மேடுகளாக்க முடியும்! தீயோனின் அரண்மனையைத் தீக்கிரையாக்க முடியும்!" "முடியாது! முடியும் என்ற எண்ணம் கொள்ளவும் கூடாது. அவ்விதமான எண்ணம் கொள்வதே மாபாபம்!" "பாபமா! மக்களைக் காப்பாற்றக் கிளம்புவதா மாபாபம்!" "மதியில்லையே உனக்கு! உன்னையும் உன்போன்ற ஜீவராசிகளையும் படைத்து ரட்சிக்கும் ஆண்டவனுடைய ஆணை காரியத்தைச் செய்ய, நீ, கிளம்புவதா! அவள் கேட்டுத்தானே சூரியன் காய்கிறான், அவனோடு! சூரிய னால், உலகையே பஸ்மீககரமாக்கிவிட முடியுமே, செய் கிறானா. செய்ய அனுமதிக்கிறாரா ஆண்டவன்! கடல் நீர் அவ்வளவையும் கண்மூடிக் கண்திறப்பதற்குள், கதிர வனால் குடித்து விடமுடியும்-அலைகள் நிரம்பிய கடலை மணற்காற்றடிக்கும் பாலைவனம் ஆக்கிவிடமுடியும்! சூரியன் செய்கிறானா? செய்ய விட மாட்டார் கடவுள்! சர்வசக்தி படைத்தவர், எம்பெருமான். அவர் அறிவார், எப்போது செய்ய வேண்டுமென்று! எதை, எப்படி, அவருக்குத்தான் தெரியும்!'" "ஆண்டவனுடைய வல்லமையை, யார் சந்தேகித் தார்கள்! அரசனுடைய அக்ரமத்தை அல்லவா, எதிர்த்து பூ-232-ப.u.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/34&oldid=1637220" இலிருந்து மீள்விக்கப்பட்டது