பக்கம்:பவழபஸ்பம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பவழ அழிக்கவேண்டும், என்கிறோம். அந்த அக்ரமம் ஒழிக்கப் படாவிட்டால், மக்கள் வேதனையிலிருந்து விடுதலை பெற மாட்டார்களே!- "எப்படி,எப்போது, மக்களின் வேதனையைப் போக்க வேண்டும் என்பது பகவானுக்குத் தெரியும், மழையைப் பொழியச் செய்பவன், நீயா? காற்றை வீசவைப்பவன், யார்? நீயா? பைத்தியக்காரா! பைத்தியக்காரா!! அது போலவே தான் இதுவும். அரசனைத் திருத்தவும் ஆட்சி முறையை மாற்றவும் ஆண்டவனால்தான் முடியும். மக்களைச் சோதிக்க மகேசன், எத்தனையோ வழிகளைக் கையாள்வார்! மன்னனைக்கொண்டு, மேலும் மேலும் வரிகளைப் போடச் செய்வார்! காராக்கிரத்திலே மக்களை தலைவர்களைக் கூட-தள்ளும்படி, மன்னனை ஏவுவார்! தாங்கமுடியாத அளவுக்குக் கஷ்டங்கள் ஏற்படுகிறபோது. மக்களின் நிலை எப்படி இருக்கிறது. நினைப்பு எப்படி இருக்கிறது. என்பதைக் கண்டு களிக்கக்கூடச் செய்வார்!" "கொடுமைகளைச் செய்பவர் மன்னன் - மகேசன் அல்ல என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்து கொண் டார்கள். அதனால்தான் மக்களிடம் எதிர்ப்புணர்ச்சி வீறிட்டு எழுகிறது.' " 'முதலில் எழும்- பிறகு விழும்! தெரியுமா விஷயம், மாளிகை வேண்டாம், கணவனே வேண்டாம் என்று கூறி விட்டு, புது மார்க்கத்தாருடன் கூடித் திரிந்து வந்த மருத வல்லி, நமது புராதன மார்க்கத்துக்கே திரும்பி வந்து சேர்ந்து விடப்போவது!! சத்யம் வெல்லும்! பொறுமை தான் வேண்டும்." வேத நிந்தகர்கள்! சண்டாளர்கள்! பாஷாண்டி மத ஸ்தாபகர்கள்! ஆச்சார அனுஷ்டான விரோதிகள் என் றெல்லாம் கூறினோம்..'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/35&oldid=1637221" இலிருந்து மீள்விக்கப்பட்டது