பக்கம்:பவழபஸ்பம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பவழ

"நானும், ஒவ்வொரு விநாடியும் யோசித்தபடியே தான் இருக்கிறேன் —என்ன செய்வது, என்ன செய்வது என்று....."

"நாங்களும், மக்கள் முன்போலப் பக்திசிரத்தையுடன் கேட்காவிட்டாலும், பாகவதக் கதைகளைக் கூறியபடிதான் இருக்கிறோம்..."

"மாபலி கதையைமட்டும், கூறவேண்டாம், இப்போது...."

"ஏன்?"

"வேண்டாம்! மாபலியிடம் மூன்றடி. தானம் வாங்கிய மகாவிஷ்ணு, பிறகு, விஸ்வரூபமெடுத்து இரண்டு அடிகளால் பூலோகத்தையும் வானலோகத்தையும் அளந்து விட்டு, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டு, மாபலியின் சிரத்தின் மீது வைத்தார்..."

"ஆமாம், அதுதான் மகாத்மீயம்..."

"அதுபோல, அரசர்களை அடுத்து, தானம் தருமம் கேட்டுப் பெறும் குருமார்கள். கொஞ்சம் இடம் கிடைத்தாலும், அரசுகளையே அபகரித்துக்கொள்வார்கள்—இதற்கு மாபலி புராணமே போதும்—என்று விதண்டாவாதிகள், மக்களிடம் சொல்லி வைத்திருக்கிறார்கள்—அதனால்தான், மாபலி கதை கூறவேண்டாம்..."

"மற்றக் கதைகளை"

"கூறுங்கள்...ஆனால் எதைச் சொன்னாலும், கொஞ்சம் திரைமறைவுடன் சொல்லவேண்டும்...எதற்கும் நாம் பொறுமையை இழந்துவிடக்கூடாது! புத்த மார்க்கம் பெரும்புயல்தான். எனினும் அதைச் சமாளிக்கும் வலிமை நமக்கு உண்டு என்ற நம்பிக்கை நிரம்பவேண்டும். பாருங்களேன், அதிசயத்தை! சிங்காரமாளிகை வாழ்வை இழந்து, சிறைக்கோட்டம் செல்லத் துணிந்த மருதவல்லி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/39&oldid=1638897" இலிருந்து மீள்விக்கப்பட்டது