பக்கம்:பவழபஸ்பம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஸ்பம்

39

மீண்டும் சீமாட்டியாகி விடச் சம்மதிக்கவில்லையா! நவகோடியார் எவ்வளவு திறமையாக—வெற்றி பெற்றிருக்கிறார், கவனியுங்கள்! மருதவல்லியின் மனம் மாறியதை, மகத்தான புண்ய கதையாக்கி மக்களிடம் கூறவேண்டும்."

"காரிருளிலே தோன்றும் மின்னல்போல இருக்கிறது, மருதவல்லியின் மனமாற்றச் சம்பவம். தோன்றி மறைந்திடும் மின்னலாகி விடக்கூடாது மருதவல்லி சம்பவம். அதை 'திவ்யஜோதி'யாக்கிக் காட்ட வேண்டும். மருதவல்லி, பிட்ஷுக்களின் பொய்யுரைகளைக் கேட்டு மயங்கினாள், கணவனை எதிர்த்தாள், பதியை விட்டுப்பிரிவது மாபாவம் என்ற சாதாரண அறிவையும் இழந்தாள். ஆனால், நவகோடியார் பரமபக்தர், தெய்வ நம்பிக்கை உள்ளவர், எனவே அவர் எப்படியும் எம்பெருமான் அந்தப் பேதைப் பெண்ணின் அஞ்ஞானத்தைப் போக்கி ரட்சிப்பார் என்ற திடசித்தத்துடன், பகவானைப் பஜித்து வந்தார், விசேஷ பூஜைகள் நடத்தினார், அதன் பலனாக மருதவல்லியின் அஞ்ஞானம் அழிந்தது, புது மார்க்கம் ஒரு புரட்டு என்பதை உணர்ந்தாள். கசிந்து கண்ணீர் மல்கி, கணவன் பாதத்தில் வீழ்ந்து வணங்கினாள். நவகோடியார், "என் பாதத்தில் வீழ்ந்து வணங்கினால் என்ன பலன்? பெண்ணே! ஐயன் பொற்பாத கமலத்தை வணங்கு—அவர் உன் பாபத்தைப் போக்குவார், அருள் பாவிப்பார்" என்ற உபதேசம் செய்தார். மருதவல்லி இப்போது புதியதோர் முகதேஜஸோடு இருக்கிறாள்! இப்படியும் இதைவிட ரசமாகவும், கூறவேண்டும் மருதவல்லியின் மனமாற்றச் சம்பவம், கலம் உடைபட்டபோது கிடைத்த தெப்பக்கட்டை போன்றது! பக்குவமாகப் பயன் படுத்த வேண்டும்"

மருதவல்லி மாளிகை திரும்பிய சம்பவம், வைதீக வட்டாரத்திலே ஒரு திருவிழாவாகக் கருதப்பட்டது. எங்கும் இதே பேச்சுத்தான்! ஒவ்வொருவர் ஒவ்வோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/40&oldid=1638975" இலிருந்து மீள்விக்கப்பட்டது