பக்கம்:பவழபஸ்பம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பவழ

வகையான விளக்கமளித்தனர் இதற்கு. மருதவல்லியோ, யாரிடமும் இதுபற்றி ஏதும் பேசுவதில்லை—மனதிலே ஏதோ தீர்மானமிருக்கிறது என்பது, முகத்திலே தெளிவாகத் தெரிந்தது. நவகோடியார், ஊரிலே கெம்பீரமாக உலவினார்.

வேலுடையான் கோயிலிலே விசேஷ பூஜைக்கு நாள் குறித்துவிட்டார் நவகோடியார். பூஜை நாளன்று மருதவல்லி ஆலயம்சென்று தரிசனம் செய்வது என்றும், பிறகு அங்குகூடிடும் பக்தர்களிடம் புதிய மார்க்கத்தைவிட்டுத்தான் விலகிய காரணத்தை எடுத்துரைத்துப் பழைய மார்க்கத்தின் மேன்மையை விளக்குவது என்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னன் வரையில் சேதி சென்றது. மண்டலமே திடுக்கிட்டு, தானப்பன் அரச குருவே ஆகிவிடக்கூடும் என்று பேசிக்கொள்ளப்பட்டது.

பழைய மார்க்கத்துக்குத் திரும்பும் புனிதவதியை வாழ்த்தினர் பலர்.

செல்வர்கள் காணிக்கை செலுத்தினர்—மருதவல்லி மூலம் விசேஷ பூஜாநாளன்று வேலுடையான் கோயிலுக்குத்தர

மருதவல்லியும், நவகோடியாரிடம் காணிக்கை கேட்டாள்—விலையுயர்ந்த பவழ மாலைகள்! ஆபத்து நீங்கும் அந்தஸ்து உயரும் என்ற மகிழ்ச்சியில், நவகோடியார் பவழ மாலைகளைக் கொண்டு வந்து குவித்தார். அவைகளை அணிந்துகொண்டு, தன் உருவத்தைத்தானே பார்த்துச் சிரித்தாள் மருதவல்லி.

"இது என்ன பைத்யம் மருதம்! பவழமாலையிடம் இவ்வளவு பைத்யமா உனக்கு? வைரம் இருக்கிறது, விலையுயர்ந்த வேறு மாலைகள் உள்ளன" என்றார் நவகோடி. எனக்குப் பவழம் என்றால் கொள்ளை ஆசை என்று கூறினாள், மருதவல்லி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/41&oldid=1638976" இலிருந்து மீள்விக்கப்பட்டது