பக்கம்:பவழபஸ்பம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஸ்பம்

41

அதிர்வேட்டுகள் முழங்கின! மறுநாள் விசேஐ பூஜைக்கு அறிவிப்புகள், மருதவல்லியின் மாளிகையிலே வேதம் ஓதப்பட்டது. பஜனைக் கோஷ்டிகள் வீதிகளில் வலம் வந்தன. வெண்ணிலாவுக்குப் புதிய வைரமாலையைத் தந்து மகிழ்ந்தான் தானப்பன்.

நள்ளிரவு! கவிராயர் கவலையுடன் படுத்துப் புரண்டு கொண்டிருக்கிறார். காசநோய்க்காரன் இருமல் அங்கு அதிர்வேட்டென இருக்கிறது. மருதவல்லி இரைக்க இரைக்க ஓடி வந்தாள்—தலைமீது இருந்த மூட்டையைக் கீழே போட்டாள்.

"அப்பா! அப்பா!"

"யாரது? என் மகளா? மருதமா?"

'ஆமப்பா, நான்தான் அப்பா!"

"மகளே! இதென்ன நள்ளிரவில்"

"கடைசி இரவு அப்பா இது...அதோ உம்காலடியில் இருப்பது பவழ மாலைகள் பவழபஸ்பம் வேண்டுமளவுக்குத் தயாரிக்கலாம்... இவ்வளவும் தந்தார்...நாளைக்குக் காட்டிக்கொடுக்கும் விழா! நான் உயிரோடு இருக்குமட்டும் அவருக்கு ஆபத்துதான். பவழபஸ்பம் தயாரித்து இவர்களைக் காப்பாற்றுங்க...என்னால் இவ்வளவுதான் முடிந்தது....இதற்குமேல் தொண்டாற்ற முடியாதப்பா...புத்த மார்க்கத்துக்கு என் சேவை இந்த அளவுதானப்பா...நல்ல பவழமப்பா, நல்ல பவழம்...விலை உயர்ந்த பவழம்...மருத்துவர் கேட்டபடி...பவழபஸ்பம்....பவழபஸ்பம்....!

கோவெனக் கதறினார் கவிராயர், உடன் இருந்தோர் அலறி எழுந்தனர், மருதவல்லியின் பிணத்தைக் கண்டார். இறுதியில் விஷம் வென்று விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/42&oldid=1638977" இலிருந்து மீள்விக்கப்பட்டது