பக்கம்:பவழபஸ்பம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பவழ எனும் புலவர் பெருமானின் மணிமொழியினை, கொழித் தெடுத்துக் கோத்தேன், சிறு சொல்லாரம். தலைவியைப் பிரித்து, தலைவன் சென்றான். தத்த ளித்தாள் தளிர்மேனியாள். தத்தையிடம் பேசித் தவித்துக் கிடந்தாள். சென்றவிடம் சிறப்புப்பெற்று, தேரிலே மீள் கிறான் தலைவன். மானினத்தினிடம் காதற் பாடம் காண் கிறான்; மங்கை நல்லாளை எண்ணி ஏங்குகிறான்; அவள் மனையிலேயும், அன்னங்கள் காதற் களியாட்டத்திலே ஈடுபட்டு உலவுமே என்பதை எண்ணினான், நாணமுடைய நங்கை, நெஞ்சிலேயுளதை வீட்டார் அறியக்கூடாதே என்று எண்ணி அஞ்சிப், பிரிந்துபோன தலைவன்,வருவார்! இன்று வருவார்!! என்ற இன்சொலை எவரேனும் பேசிடக் கேட்டால் புண்ணாறும் என்று கருதிப், பேசிட ஓர் பைங் கிளியை எடுத்துத் தன் அங்கையில் ஏந்தி, பல பேசிச் சல சலப்புண்டாக்கி மனையுளோருக்குத் தன்னைக் கிளி காட்டிக் கொடுத்துவிடுமோ என்று அஞ்சி, 'கிளியே! அவர் இன்று வருவார் என்ற சொல்மட்டுமே உரைத்திடு', என்று கேட் பாள், எனத் தலைவன் எண்ணி, வேகமகாத் தேரைச் செலுத்து, என்று தேர்ப்பாகனுக்குக் கூறுகிறான். அவனை ஊக்குவிக்கக் கருதிப்போலும், நற்றிறம்படைத்த பாகனே என்றும் அவனைப் புகழ்கிறான். காதற் பாதையைக் கவி இளநாகனார் கன்னித் தமிழிலே, கவிதையாக்கிக் கூறி யுள்ளார். அகநானூறு எனும் அருந்தமிழ் நூலிலே! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே, பட்டமளிப்பு விழாவிலே, அண்ணல் சர் சண்முகம் ஆற்றிய, அழகிய, அரிய, சொற்பொழிவினைப் படித்ததும் எனக்கு இந்தச் செந்தமிழ்ச் செய்யுள் நினைவிலே நர்த்தனமாடிற்று. பரதா! சர் சண்முகத்தின் வீரவுரை படித்த உனக்கு விரகதாபச் செய்யுள் நினைவிற்கு வருவானேன்! தமிழ்க் கலையின் உயர்வு பற்றி, சேர நாட்டாட்சியினைச் சில ஆண்டுகள் நடாத்திய சண்முகம் செப்பினாரே,இதுபற்றி, ஏடு விரித்து எடுத்தாயோ இன்சுவையை," என்று கேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/45&oldid=1637231" இலிருந்து மீள்விக்கப்பட்டது